வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

தாமரையை அடிமையாக்கும் பிரியங்கா.. பிக்பாஸ் வீட்டு ஓனர்னு நினைப்பா.?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பிரியங்கா தாமரையிடம் வீட்டின் தலைவர் பதவிக்கு நீ தகுதி இல்லை என்று தாமரையிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த தாமரை, பிரியங்காவிடம் அதை சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சண்டையிட்டார்.

தாமரை மற்றும் பிரியங்காவின் இந்த சண்டை தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் தாமரையைப் பற்றி பேசிய பிரியங்காவுக்கு எதிராக ட்ரோல் செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் பிரியங்கா தான் ஒரு மிகப் பெரிய செலிபிரிட்டி இதுதான் என்னுடைய தகுதி என்று நினைத்துக் கொண்டுள்ளார். மேலும் கஷ்டப்பட்டு முன்னேறி வரும் தாமரையை அவர் தனக்கு அடிமையாக வைத்திருக்கும் நோக்கத்துடன் பேசி வருகிறார்.

நேற்றைய எபிசோடில் கூட பிரியங்கா, தாமரை பிக் பாஸ் வீட்டின் தலைவராக கூடாது என்ற கருத்தை திரும்ப திரும்ப சொல்லி வந்தார். அதை மற்றவர்கள் ஆமோதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கத்திக் கொண்டே இருந்தார். ஒருவருடைய தகுதியை தர நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை பிரியங்காவுக்கு யார் தந்தது.

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நாள் முதல் இன்றுவரை பிரியங்கா நான் தான் பிக்பாஸ் வீட்டின் ஓனர் என்பது போன்ற மனப்பான்மையுடன் இருந்து வருகிறார். மேலும் தாமரையை முட்டாள், தகுதி இல்லை என்பது போன்ற வார்த்தைகளை சொல்லி தொடர்ந்து அவமானப் படுத்தி வருகிறார்.

பிரியங்காவின் இந்த செயல் பிக்பாஸ் ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ரசிகர்கள் பிரியங்காவை நீ எந்த காலேஜில் படித்து தகுதியை வளர்த்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தாய் என்ற கேள்விகளை கேட்டு விளாசி வருகின்றனர்.

priyanga-bb5-cinemapettai0

Trending News