விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது பாரதியும், கண்ணம்மாவும் ஆறு மாத காலம் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதைத்தொடர்ந்து வெண்பாவின் திட்டத்தின்படி மாயாண்டி அஞ்சலியை கடத்துகிறார். அப்போது அஞ்சலிக்கு பிரசவ வலி ஏற்படுகிறது. மறுப்பக்கம் கண்ணம்மா கோயிலுக்கு செல்லும் பொழுது அஞ்சலியின் நாடி பிடித்து பார்த்த பாட்டியும் கோயிலில் இருக்கிறார். அகிலன் கோயிலுக்கு வந்து கண்ணம்மாவிடம் அஞ்சலி காணவில்லை என்பதைச் சொல்லுகிறார்.
அப்போது பாட்டி, அஞ்சலிக்கு உள்ள பிரச்சனையை கண்ணம்மா, அகிலன் இடம் சொல்லுகிறார். இதனால் கண்ணம்மா, பாட்டி, அகிலன் மூவரும் அஞ்சலியை தேடி பதட்டத்துடன் செல்கிறார்கள்.
அப்போது அஞ்சலியின் தொலைபேசி சிக்னலை வைத்து அஞ்சலி இருக்கும் இடம் அகிலனுக்கு தெரிகிறது. இதனால் மூவரும் அஞ்சலி இருக்கும் இடத்திற்கு செல்கிறார்கள். கண்ணம்மா அங்கு வருவது மாயாண்டிக்கு தெரிந்ததால் அங்கிருந்து தப்பித்து விடுகிறார்.
பின்பு அங்கு இருக்கும் ரவுடிகளை அகிலன் அடிக்கிறார். அங்கு பிரசவ வலியில் அஞ்சலி துடிப்பதை பார்த்து கண்ணம்மாவும், பாட்டியும் அஞ்சலிக்கு பிரசவம் பார்க்கிறார்கள். அஞ்சலிக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. கண்ணம்மா குழந்தையை காட்ட, அஞ்சலி குழந்தையை பார்த்த பின் மயக்கம் அடைகிறார்.
இதனால் மருத்துவர் சொன்னபடி பிரசவத்திற்கு பின் அஞ்சலி இறந்துவிடுவார் என்றும் அஞ்சலியின் குழந்தையை கண்ணம்மா வளர்ப்பது போன்ற கதைக்களம் நகரக்கூடும்.