திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சினேகா ஏமாற வாய்ப்பே இல்லை.. இதுல ஏதோ உள்குத்து இருக்கு

ஆந்திராவில் உள்ள பிரபல ஏற்றுமதி நிறுவனத்தில் முதலீடு செய்த 25 லட்சம் பறிபோனது என நடிகை சினேகா காவல்துறையில் கம்ப்ளைன்ட் செய்துள்ளார். சினேகா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்து வருவது மட்டுமல்லாமல் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார்.

சினேகா நடிகர் பிரசன்னாவை அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் நடித்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வெளியாகி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வரும்.

பிரசன்னாவும், சினேகாவும் திரைப்படங்கள், கேம் ஷோக்கள், ரியாலிட்டி ஷோக்கள், மாடலிங் மற்றும் விளம்பரங்கள் ஆகியவற்றில் தொடர்ந்து நடித்து அதிகமாக சம்பாதித்தும் வருகிறார்கள்.

sneha prasanna family
sneha prasanna family

சினேகா, பிரசன்னாவை திருமணம் செய்வதற்கு முன்பு சினேகா பிரபல தயாரிப்பாளரை காதலித்து வந்தார். அவருடன் நிச்சயமா நிலையில் அந்த தயாரிப்பாளர் சினேகாவுக்கு வைர மோதிரத்தை பரிசளித்தார். திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பே பிரபல தயாரிப்பாளரின் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட அவர் நல்லவர் இல்லை என்பதை அறிந்த அவரிடமிருந்து சினேகா விலகி விட்டார்.

திரைப்படங்களிலும், சொந்த வாழ்க்கையிலும் மிகவும் கவனமாக இருக்கும் சினேகா எப்படி ஏமாறுவார். சினேகா பணத்தை இழக்க வாய்ப்பே இல்லை என்றும், கண்டிப்பாக இதில் ஏதோ உள்குத்து இருக்கும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Trending News