விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் விஜே தீபிகா. அதில் அவர் கண்ணனுக்கு ஜோடியாக நடித்து வந்தார்.
ஆனால் சில காரணங்களால் தீபிகா சீரியலை விட்டு விலகினார். தற்போது அவருக்கு பதிலாக சாய் காயத்ரி ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியலை விட்டு விலகினாலும் தீபிகா கண்ணனாக நடிக்கும் சரவண விக்ரமுடன் நட்பாக பழகி வருகிறார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து யூடியூப் சேனலை தொடங்கி நடத்தி வருகின்றனர். அதில் கலகலப்பான பல வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இருவரும் சேர்ந்து எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.
அவர்கள் இருவரையும் ஒன்றாக பார்க்கும் ரசிகர்கள் நீங்கள் காதலிக்கிறீர்களா என்ற கேள்விகளை தொடர்ந்து கேட்டு வந்தனர். அதற்கு தீபிகா நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று பதிலளித்துள்ளார்.
இந்நிலையில் தீபிகா சரவணனுடன் சமீபத்தில் சேர்ந்து எடுத்த போட்டோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு தீபிகா மற்றும் சரவண விக்ரம் இருவரும் சென்றுள்ளனர்.
அங்கு எடுத்துக்கொண்ட போட்டோவை தீபிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் மீண்டும் தீபிகாவிடம் உண்மையைச் சொல்லுங்கள் நீங்கள் லவ்வர்ஸ் தானே என்று கேட்கின்றனர்.
மேலும் ரசிகர்கள் இப்படி எத்தனை பேரை நாங்கள் விஜய் டிவியில் பார்த்து இருப்போம் நீங்களும் ரீல் ஜோடியில் இருந்து ரியல் ஜோடியாக மாறுவதை பார்க்கத்தானே போகிறோம் என்று கூறுகின்றனர். இவர்களுடைய இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.