சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

4 வயது வித்தியாசத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு அம்மாவாக நடித்த இளம் நடிகை.. அடக்கொடுமையே!

கடந்த 1998-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் திரைப்படமானது சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. காதலை அடிப்படையாகக் கொண்ட இந்தப்படத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யாராய், நாசர் ஆகிய மூவரும் இரட்டை வேடத்தில் நடித்திருந்தனர்.

மேலும் ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யாராயின் அம்மாவாக நடிகை ஜானகி சபேஷ் கச்சிதமாக நடித்திருப்பார். ஜானகி சபேஷ் இந்தப்படத்தை நடிக்கும்போது ஐஸ்வர்யா ராயை விட நான்கு வயது மட்டுமே மூத்தவராம்.

எனவே தன்னைவிட நான்கு வயது மட்டுமே கம்மியான இருப்பவருக்கு அம்மாவாக, ஜீன்ஸ் படத்தில் நடிகை ஜானகி சபேஷ் ஐஸ்வர்யாராயுடன் நடித்திருக்கிறார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதேபோன்று தென்னிந்திய சினிமா திரையுலகில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்றுள்ள நடிகை ஜானகி சபேஷ், தமிழ் சினிமாவிலும் விஜய், அஜித், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்த கலக்கியுள்ளார்.

குறிப்பாக கில்லி படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்ததன் மூலம், விஜயுடன் நடிகை ஜானகி சபேஷ் செம ரகளை செய்து இருப்பார். அதைப்போன்றே ஜோடி, குஷி,  அயன், வேட்டையாடு விளையாடு, சிங்கம்-1, 2 போன்ற படங்களில் அம்மாவாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்த  நடிகை ஜானகி சபேஷ் உடைய நடிப்பு ரசிகர்களின் மத்தியில் பெருமளவு பேசப்பட்டது.

பொதுவாக நடிகை ஜானகி சபேஷ் நடிக்கும் படங்களில் துருதுருவென்று குறும்பு செய்யும் பிள்ளைகளுக்கு சப்போர்ட்டாக பேசும் அம்மாவாக தன்னுடைய வெகுளித்தனமான நடிப்பை வெளிக்காட்டும் கெட்டிக்காரர்.

மேலும் இவர் படங்களில் நடிக்கும் பொழுது அதில் இருக்கும் கதாபாத்திரமாகவே மாறி விடுவார். அதோடு படத்தில் இவருடைய ஒவ்வொரு டயலாக்கும் வேற லெவலில் ரசிகர்களை ஈர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News