நடிகையை பார்க்காமலேயே சூப்பர் ஹிட் பாடலை இயற்றிய வைரமுத்து.. ஷங்கரே மிரண்டுபோன அதிசயம்

ஷங்கர் இயக்கத்தில்  மாபெரும் வெற்றிப்படமாக ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யாராய், நாசர் உள்ளிட்ட  பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு பாடல்களும்  ரசிகர்களின் மனதில் இன்றளவும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் ஜீன்ஸ் படத்தில்  ‘அன்பே அன்பே கொல்லாதே’  என்ற பாடலை  எழுதிய  பாடலாசிரியர் வைரமுத்து  அவர்களின் ஒவ்வொரு வரிகளும்  பாடலைக் கேட்கும் ஒவ்வொருவரையும் மெய்மறக்கச் செய்தது. இந்தப் பாடலை ஹரிஹரன், அனுராதா, ஸ்ரீராம் ஆகியோர் பாடியிருப்பார்கள்.

எனவே இந்தப் பாடல் உருவானதன் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது இணையத்தில் பெருமளவு பேசப்படுகிறது. ஏனென்றால்  வைரமுத்து இந்தப் பாடலை  எழுதும் பொழுது  ஐஸ்வர்யா ராயை பார்க்காமலே எழுதியிருக்கிறார்.

‘அன்பே அன்பே கொல்லாதே’ என்ற பாடல் வரிகள் முழுவதும் கதாநாயகியின் அழகை வர்ணிக்கும் பாடலாக அமைந்தது. ஆனால் வைரமுத்து, ஐஸ்வர்யா ராய் அவர்களின் புகைப்படத்தை கூட பார்க்காமல்  இந்தப் பாடலை எழுதியிருக்கிறார்.

இதைக் கண்ட இயக்குனர் ஷங்கர் மிரண்டு போய் விட்டாராம். அதன் பிறகு வைரமுத்து அவர்களுக்கு ஐஸ்வர்யாராயை பார்ப்பதற்கு சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது. அப்போது பேசிய வைரமுத்து, ‘என்னுடைய  பாடலில் பல வரிகள் பொய்யில்லை’ என்று  மெய்சிலிர்த்து பேசியிருக்கிறார்.

பாடலாசிரியர் வைரமுத்து மட்டுமல்ல ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யாராய் அவர்களின் அழகை கண்டு வியப்படையாதோர் எவருமிலர். அந்த அளவிற்கு ஜீன்ஸ் படத்தின் ஒவ்வொரு  காட்சியிலும் ஐஸ்வர்யாராயை அவ்வளவு அழகாக காண்பித்திருப்பார்கள்.