வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2025

கதையில் ஆதிக்கம் செலுத்திய அர்ஜுன்.. தலையில் துண்டு போட்ட பிரபல தயாரிப்பாளர்

ஒரு திரைப்படத்திற்கு இயக்குனர், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர் எவ்வளவு முக்கியமோ அதற்கு ஒருபடி மேலாக தயாரிப்பாளர் முக்கியம். ஒரு படம் எந்த பொருட்செலவில் எடுக்கப்படுகிறது என்பதும் அந்தப் படம் எவ்வளவு லாபம் ஈட்டும் என்ற முழு பொறுப்பும் தயாரிப்பாளரிடமே உள்ளது.

அவ்வாறு தயாரிப்பாளர்கள் இயக்குனரிடம் படத்தின் கதையை கேட்டு பிடித்திருந்தால் மட்டுமே படத்தை தயாரிக்க ஒப்புக்கொள்வார். படத்தை இயக்கும்போது சில முன்னணி நடிகர்கள் தங்களுக்கு ஏற்றவாறு கதையை மாற்றிக் கொள்கிறார்கள். இதனால் சில படம் பெரிய அளவில் தோல்வியடைகிறது.

சிவி சசிகுமார் கருணை மனு என்ற கதையை நடிகர் அர்ஜுனிடம் சொல்லியிருந்தார். அர்ஜுனுக்கு கதை ரொம்ப பிடித்துப்போக இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்த படத்தில் ரம்பா, மீனா என இரண்டு கதாநாயகிகள் கொண்ட விஜயகுமார், டெல்லி கணேஷ், வடிவேலு, ஆனந்த்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள்.

இந்த படத்தை ஆர்பி சௌத்ரி தயாரித்திருந்தார். அர்ஜுன் கருணை மனு படத்தில் நிறைய காட்சிகளை மாற்றி அமைத்து இருந்தார். கருணை மனு என்ற படத்தின் தலைப்பையும் செங்கோட்டை என மாற்றப்பட்டு 1996 இல் வெளியானது. செங்கோட்டை படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சனரீதியாக தோல்வியை சந்தித்தது.

இதுபோல் பல நடிகர்கள் கதையின் காட்சிகளை மாற்றுவதால் சில படம் வெற்றியும் பெறுகிறது சில படங்கள் தோல்வியை சந்திக்கிறது. படம் வெற்றியோ, தோல்வியோ இது இரண்டுமே தயாரிப்பாளரை தான் சேருகிறது. இதனாலேயே சில தயாரிப்பாளர்கள் முன்கூட்டியே கதையில் உள்ளவாறு மட்டுமே படத்தை எடுக்க இயக்குனரிடம் சொல்லிவிடுகிறார்கள்.

இது போன்ற ஹீரோக்கள் தலையிடுவதால் பல தயாரிப்பாளர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். இதனை தடுத்து நிறுத்தினால் மட்டுமே  தரமான படங்களை இயக்குனர்களால் சுதந்திரமாக வெளிக்கொண்டு வர முடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Trending News