வயதானாலும் உன் ஸ்டைலும் அழகும் குறையவே என்னும் பட வசனம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ நடிகர் விஜய்க்கு பக்காவாக பொருந்தும். நாளுக்கு நாள் விஜய்யின் அழகு மட்டும் அல்ல அவருக்கான பட வாய்ப்புகளும் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆமாங்க அவரோட 65வது படமே இன்னும் முடியல அதுக்குள்ள 68 வது படம் வரைக்கும் கமிட்டாகிட்டாரு.
விஜய் இப்போ நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில நடிச்சிட்டு இருக்காரு. இந்த படத்தோட 100வது நாள் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக படக்குழுவினர் புகைப்படம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார்கள். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் 66வது படத்திலும், அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 67வது படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் விஜய்யின் 68வது படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி விஜய் மீண்டும் இயக்குனர் அட்லியுடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்.
ஏற்கனவே தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று படங்களில் அட்லியுடன் கூட்டணி அமைத்த விஜய் தற்போது மீண்டும் நான்காவது முறையாக கூட்டணி அமைக்க உள்ளாராம். அட்லி தற்போது ஷாருக்கானை வைத்து ஹிந்தியில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். எனவே இப்படத்தை முடித்த பின்னர் விஜய்யுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்னதான் அட்லி காப்பியடித்து படங்களை இயக்கி வருகிறார் என விமர்சனங்கள் எழுந்தாலும் அவரது படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது மீண்டும் இவர்கள் இருவரும் இணையும் இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், 2023ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.