விஜய் டிவியில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. பழைய கண்ணம்மாவை மாற்றி புதிய கண்ணம்மா வந்தபோதும் ரசிகர்கள் இந்த சீரியலுக்கு தொடர்ந்து தங்கள் ஆதரவை தந்து வருகின்றனர்.
பாரதி கண்ணம்மாவில் வரும் வாரத்திற்கான புரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் கோர்ட்டு உத்தரவுபடி கண்ணம்மா உடன் ஆறு மாதம் வாழ்வதற்காக கண்ணம்மாவின் வீட்டிற்கு வருகிறார் பாரதி. கண்ணம்மா விடமிருந்து எப்படியாவது விவாகரத்து பெற்று விட வேண்டும் என்று வேண்டா, வெறுப்பாக அந்த வீட்டில் தங்குகிறார் பாரதி.
இப்பொழுது சென்னையில் அதிக மழை பெய்து வருவதால். கண்ணம்மா வீட்டிலும் மழை பெய்கிறது. அதோடு இல்லாமல் முதல் தளத்தில் இருக்கும் கண்ணம்மா வீட்டிற்கு உள்ளேயும் மழைத் தண்ணீர் வந்து விடுகிறது. இதனால் அதிர்ச்சியடையும் பாரதி, ஐயோ காப்பாத்துங்க என்று கூச்சலிடுகின்றார்.
பாரதியின் அலறலைக் கேட்ட கண்ணம்மா தண்ணீரை இறைத்து வெளியில் ஊற்றுகிறார். அதனால் வேறு வழியின்றி பாரதியும் கண்ணம்மாவுக்கு உதவி செய்கிறார். இங்குதான் டைரக்டர் ஒரு ட்விஸ்ட் வைக்கிறார்.
அதாவது ஹீரோ பாரதி மழைத் தண்ணீரில் வழுக்கி கீழே விழ பார்க்கிறார். உடனே பதறிப் போகும் கண்ணம்மா அவரை கீழே விழாமல் தாங்கி பிடிக்கிறார். ரொமான்டிக்கான பேக்ரவுண்ட் பாடலுடன் ப்ரோமோ முடிகிறது. தற்போது இந்த புரோமோவிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மறுபடியும் மொதல்லருந்தா, ஏற்கனவே ஒரு டிஎன்ஏ டெஸ்டுக்காக எட்டு வருஷமா வெயிட் பண்றோம். இதுல அடுத்த பஞ்சாயத்து வேறயா, இதை எத்தனை வருஷம் இழுப்பாங்களோ என்று ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் புலம்பி தள்ளுகின்றனர்.