வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பாரதி கண்ணம்மா இது உலக நடிப்புடா சாமி.. கம்பி கட்ற கதயெல்லாம் சொல்றாங்க பாருங்க

விஜய் டிவியில் டி ஆர் பி ல் முதலிடத்தை பிடித்துள்ள பாரதிகண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. தற்போது பாரதியும், கண்ணம்மாவும் ஒரே வீட்டில் வாழ வேண்டும் என கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதனால் பாரதி கண்ணம்மா வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனால் பாரதிக்கும், கண்ணம்மாவுக்கும் லவ் ட்ராக் ஏற்படுத்த இயக்குனர் பல முயற்சிகள் செய்து வருகிறார். முன்பு பாரதிகண்ணம்மா ப்ரோமோகள் பல ட்விஸ்ட்களுடன் வரும். ஆனால் கடைசியில் சீரியலில் பார்த்தால் எல்லாம் கனவாக இருக்கும். இதனால் பாரதிகண்ணம்மா ரசிகர்கள் பலரும் இயக்குனரை திட்டி வந்தார்கள்.

தற்போது கன மழையால் சென்னையில் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதை அப்படியே சீரியலிலும் கொண்டு வந்துள்ளார் பாரதிகண்ணம்மா இயக்குனர். இரவு நேரத்தில் கனமழை பெய்து கண்ணம்மா வீட்டுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது.

பாரதி கீழே காலை வைக்க போது தண்ணீர் சூழ்ந்துள்ளது. உடனே பாரதி, கண்ணம்மாவை அழைத்து ஆபத்து வீட்டுக்குள் மழைத் தண்ணி வந்துடுச்சு, இப்ப என்ன பண்றது என பாரதி கேட்கிறார். பின்பு பாரதி, கண்ணம்மா இருவரும் சேர்ந்து மழைத்தண்ணி வெளியே எடுத்து ஊற்றுகிறார்கள்.

அப்போது பாரதி தவறி விழும்போது கண்ணம்மா தழுவி பிடிக்கிறார். இனிமேல் பாரதிகண்ணம்மா தொடரில் இதுபோன்ற காட்சிகள் நிறைய இடம்பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். பாரதி, கண்ணம்மா இருவரையும் சேர்க்க பல யுத்திகளை இயக்குனர் கையாள்வார்.

கண்ணம்மா குடியிருப்பது மாடியில் அங்கு எப்படி தண்ணீர் வரும் ஒரு நியாயம் வேணாமா, டைரக்டர் நம்மள இன்னும் பைத்தியக்காரன் நினைச்சிட்டு இருக்காரா, இவ்வளவு பண்ண வரு மண்ட மேல உள்ள கொண்டைய மறந்துட்டாரே, கம்பி கட்ற கதயெல்லாம் சொல்றாங்க பாருங்க என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். இயக்குனர் எப்படி தான் கதை விட்டாலும் பாரதிகண்ணம்மா தொடர் தொடர்ந்து டிஆர்பி யில் முதலிடத்தை பிடித்துள்ளது.

Trending News