செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

போயஸ் கார்டனில் நயன்தாரா வாங்கிய 2 பிரம்மாண்ட வீடு.. விலையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் பெருமைக்குரியவர் நடிகை நயன்தாரா. ஆரம்ப காலகட்டத்தில் பல சர்ச்சைகளும், பிரச்சனைகளையும் சந்தித்தாலும் தற்போது தனக்கென ஒரு தனி ஸ்டைலில் நடித்து வருகிறார்.

இவர் தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக இருக்கிறார். நயன்தாரா எது செய்தாலும் அது ஒரு பிரபலமாக பேசப்படும். அந்த வகையில் தற்போது இவர் போயஸ் கார்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள பிரபலங்கள் பலரும் போயஸ் கார்டனில் வசித்து வருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பலருக்கும் போயஸ் கார்டனில் வீடு உள்ளது. தற்போது நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் தனது கனவு இல்லத்தை கட்டி வருகிறார்.

அவரை தொடர்ந்து நடிகை நயன்தாராவும் தற்போது போயஸ் கார்டனில் குடியேற உள்ளார். அவர் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்த போது அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார். அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகும் நயன்தாரா தனது திருமணத்திற்கு பின் குடியேறுவதற்கு போயஸ் கார்டனில் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார்.

இந்த இரண்டு வீடுகளும் நான்கு அறைகளை கொண்ட பிரமாண்ட வீடு என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மதிப்பு கிட்டத்தட்ட 18 கோடியாம், மேலும் நயன்தாரா தற்போது காத்துவாக்குல 2 காதல் மற்றும் ஒரு இந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த பட வேலைகள் அனைத்தும் முடிந்த பின் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் இருக்கும் நயன்தாரா விரைவில் போயஸ் கார்டனில் குடியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா சமீபத்தில் தனது 37வது பிறந்த நாளை தனது காதலருடன் கொண்டாடினார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அவர் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News