வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விஜய் டிவிக்கு கும்பிடு போட்ட பிரபல தொகுப்பாளினி.. ஆள விடுங்கடா சாமி என ஓட்டம்

சின்னத்திரையில் அதிக தொகுப்பாளர் கொண்டது விஜய் டிவிதான். ஏனென்றால் அவர்கள் வெளியிடும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் தரமாக இருக்க வேண்டும் என்பதற்காக சல்லடை போட்டு தேடி தொகுப்பாளர்கள் தரமாக களம் இறங்குவார்கள். இதன் மூலம் சினிமா வாய்ப்புகள் கிடைத்து முன்னேறிய பிரபலங்களும் ஏராளம்.

காபி வித் டிடி நிகழ்ச்சி டிடி தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி இவரை தவிர வேறு தொகுப்பாளர்கள் தொகுத்து வழங்கியும் டிடி போல் நிகழ்ச்சி யாராலும் தொகுத்து வழங்க முடியாத என்ற அளவிற்கு தனது திறமையை வெளிப்படுத்தினார். இந்த மாதிரி ஒவ்வொரு தொகுப்பாளரும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளனர்.

அதில் ஒருவர்தான் பாவனா இவரின் நகைச்சுவையான பேச்சும், கிண்டல் செய்யும் வசனங்களும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. ஒரு காலத்தில் விஜய் டிவியில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அப்போது இவர்களது நிகழ்ச்சிதான் விஜய் டிவியில் பெரிதும் பேசப்பட்டது.

அதன் பிறகும் பாவனா விஜய் டிவியின் மற்றொரு தொலைக்காட்சியான ஸ்டார்ஸ் போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கிரிக்கெட் விளையாட்டை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது ரசிகர் ஒருவர் பாவனாவிடம் மீண்டும் விஜய் டிவியில் ஏதாவது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவீர்களா என கேட்டுள்ளார்.

அதற்கு பாவனா தற்போது வாய்ப்பில்லை மேலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் கிரிக்கெட் தொகுத்து வழங்குவதற்கு சரியாக நேரம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதாகவும் மேலும் ஒரு தொலைக்காட்சியிலிருந்து வாய்ப்புகள் கிடைத்து வருவதாகவும்.

இதனால் தற்போது விஜய் டிவியில் தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பு சாத்தியமில்லை என கூறியுள்ளார். இப்படி ஒரு அடையாளம் கிடைப்பதற்கு விஜய் டிவி முக்கியமான காரணமாக இருப்பதை அவர் மறக்காமல் இருந்தால் சரிதான் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Trending News