வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ரீ-என்ட்ரியில் ஜெயிப்பதற்காக அந்நியனாக மாறிய லட்சுமிமேனன்.. இந்த முயற்சி கைகொடுக்குமா

சசிகுமாரின் சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் அறிமுகமான லட்சுமிமேனனின் ஆரம்பகால படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது வெளியாகும் அவரது படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. லட்சுமிமேனனின் புலிகுத்தி பாண்டி திரைப்படம் கடைசியாக வெளியானது.

நாய்கள் ஜாக்கிரதை பட இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ரமேஷ் சுப்ரமணியன் இயக்கிவரும் ஏஜிபி படத்தில் லட்சுமி மேனன் நடித்து வருகிறார். அந்நியன் படத்தில் விக்ரம் அம்பி, ரெமோ, அந்நியன் என்ற மூன்று மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்தது போல் லட்சுமி மேனன் புது முயற்சியாக மூன்று வேடத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கே எஸ் ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ஏஜிபி படத்தில் லட்சுமி மேனன் ஸ்கீசஃப்ரீனியா என்ற மனச்சிக்கல் கொண்ட பெண்ணாக நடித்துள்ளார். ஒரே பெண், கற்பனை வாழும் பெண்ணாகவும், மெய்யான உலக வாழ்பவள் ஆகவும் மற்றொன்று மாறுபட்ட கருத்துக்களை கொண்டவளாகவும் எதிர்பாராத முறையில் நடந்து கொள்ளும் மன நோய் கொண்ட பெண்ணாக லட்சுமிமேனன் நடித்துள்ளார்.

ஏ ஜி பி படத்தில் ஆர் பி பரதன், மோத்தீஸ்வர், குழந்தை நட்சத்திரமாக சாய் ஜீவிதா ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் கதாபாத்திரங்கள் அஞ்சலி, கெளதம், பூஜா இந்த மூவர் பெயரின் முதல் ஆங்கிலே எழுத்தை கொண்டு ஏஜிபி படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவு சந்தோஷ் பாண்டி. ஜெய் க்ரிஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அண்மையில் ஏஜிபி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா, விமல், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர்கள் சக்தி சௌந்தர்ராஜன், சிம்புதேவன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். லட்சுமி மேனன் ரீ-என்ட்ரியில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் இவருக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

agp-first-look-laxmi-memon
agp-first-look-laxmi-memon

Trending News