விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியலில் அழகர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பிரவீன் தேவசகாயம். ஆரம்பத்தில் வில்லனாக இருந்த அவருடைய கேரக்டர் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டது.
இவர் ஈரமான ரோஜாவே சீரியலை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலிலும் நடித்து வருகிறார். இதில் துர்கா என்ற வில்லன் கேரக்டரில் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த சீரியலில் கண்ணம்மாவுக்கு பெரும் குடைச்சலை கொடுத்து கொண்டிருப்பவர் வெண்பா. ஆனால் அந்த வெண்பாவிற்கே பெரிய தலைவலியாக இருப்பவர் இந்த துர்கா. இந்த கேரக்டரில் தான் பிரவீன் நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் சீரியல்களில் வில்லனாக நடித்து வந்த இவர் தற்போது காதல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய இந்த கேரக்டர் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படுகிறது. இவர் நடிப்பை தவிர நடனம், மிமிக்ரி, விளையாட்டு என்று அனைத்திலும் அதிக ஆர்வம் கொண்டவர்.
சின்னத்திரை நடிகர்கள் அடுத்தடுத்து தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில்கூட ராஜா ராணி2 சீரியலில் நடித்து வரும் சித்துவுக்கும், ஸ்ரேயாவுக்கும் திருமணம் முடிந்தது. இந்நிலையில் நடிகர் பிரவீன் தற்போது திருமண பந்தத்தில் நுழைந்துள்ளார். இவர் ஐஸ்வர்யா என்னும் பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
ஐஸ்வர்யா, ராஜா ராணி முதல் பாகத்தில் நந்தினி எனும் கேரக்டரில் நடித்தவர். அவர்களுடைய திருமணத்திற்கு விஜய் டிவியை சேர்ந்த பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரவீன், ஐஸ்வர்யா இவர்களின் திருமண புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும், ஆசிகளையும் தெரிவித்து வருகின்றனர்.