ஒரு பாட்டுக்கு இத்தனை இலட்சங்களா? இதுக்கே ஒரு பட்ஜெட் வேண்டும் போலயே!

தமிழ் சினிமாவில் படங்கள் வெற்றி பெறுவதற்கு நடிகர், நடிகைகள் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு பாடல்களும் முக்கியத்துவம் வகிக்கிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் பின்னணிப் பாடகர், பாடகிகளின் எண்ணிக்கை குறைந்த அளவே உள்ளது.

பின்னணிப் பாடகர் சித் ஸ்ரீராம் சென்னையில் பிறந்தவர். இவர் சிறுவயதிலேயே வெளிநாட்டுக்குச் சென்று கல்வி பயின்று இசை மேல் உள்ள ஆர்வத்தால் இசை கற்றுக் கொண்டார். இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் இசையில் வெளிவந்த கடல் படத்தில், அடியே பாடலின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றார். அஜித்தின் விசுவாசம் படத்தில், கண்ணான கண்ணே பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி மிகப் பெரிய ஹிட்டானது.

இதன்பிறகு ஐ படத்தில் என்னோடு நீ இருந்தால், அச்சம் என்பது மடமையடா படத்தில் தள்ளிப்போகாதே, என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் மறுவார்த்தை பேசாதே என பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். சித் ஸ்ரீராம் பயிற்சிக்குப் பின் 2 மணிநேரத்திலேயே பாடலை பாடி முடித்து விடுவாராம். இவர் ஒரு பாடலுக்கு 4 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார்.

சித் ஸ்ரீராமக்கு அடுத்தபடியாக அதிகம் சம்பளம் வாங்குபவர் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல். தன்னுடைய 16 வயதில் இருந்தே படங்களில் பாட தொடங்கியுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், அசாமி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி போன்ற பல்வேறு மொழி படங்களில் பாடல் பாடி வருகிறார்.

ஸ்ரேயா சில்லுனு ஒரு காதல் படத்தில் முன்பே வா, 7 ஜி ரெயின்போ காலனி படத்தின், நினைத்து நினைத்து பார்த்தால், வெயில் படத்தில் உருகுதே மருகுதே, விருமாண்டி படத்தில் உன்ன விட, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில், மன்னிப்பாயா போன்ற பாடல்கள் மிகப் பெரிய ஹிட்டானது. இவர் ஒரு பாடலுக்கு 3 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார்.

ஸ்ரேயா கோஷலுக்கு அடுத்தபடியாக சாதனா சர்கம் அதிகம் சம்பளம் வாங்குகிறார். இவர் தமிழ், ஹிந்தி, குஜராத்தி, வங்காளம், பஞ்சாபி, மற்றும் நேபாளம் உட்பட மொத்தம் இருபத்தைந்து மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். மின்சார கனவு படத்தில் வெண்ணிலவே வெண்ணிலவே, நெஞ்சினிலே படத்தில் மனசே மனசே கதவைத் திற, அலைபாயுதே படத்தில் ஸ்நேகிதனே எனப் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். சாதனா ஒரு பாடலுக்கு 2 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார்.