திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

16 வயது பெண்ணாக மாறிய குஷ்பு.. புகைப்படம் பார்த்து ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. நடிகைகள் என்றால் ஸ்லிம்மாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை மாற்றி சற்று கொழுக் மொழுக் என இருந்தாலும் திரையுலகில் சாதிக்கலாம் என்று நிரூபித்து காட்டியவர் தான் குஷ்பு. இவரது அழகுக்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.

ரஜினி, கமல் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்த குஷ்பூ ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்தார். அவர் நடித்த படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி பெற்றன. ஒருகட்டத்தில் நடிகருக்காக அல்லாமல் குஷ்புகாகவே படம் பார்க்க சென்ற ரசிகர்களும் உருவாகினர். அந்த அளவிற்கு இவருக்கு மார்க்கெட் இருந்தது.

தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகை குஷ்பூ தனது உடல் எடையையும் குறைத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

kushboo
kushboo

குஷ்பூ உடல் எடையை குறைத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தற்போது குஷ்பு 16 வயது பெண்ணாக இருப்பதாக கூறி வருகின்றனர் மேலும் வயதானாலும் இவரது அழகு குறையவில்லை எனவும் கூறிவருகின்றனர் தற்போது இவர் வெளியிட்டுள்ள இப் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது

Trending News