திருமண போட்டோவை வெளியிட்ட நட்சத்திரா.. வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்

சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மற்றும் சீரியல் கதாநாயகி என்று படு பிஸியாக இருப்பவர் நட்சத்திரா நாகேஷ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

நட்சத்திரா, ராகவ் என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதித்த நிலையில் ராகவ், நட்சத்திரா திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது. அந்த போட்டோக்கள் யாவும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

விரைவில் திருமணம் என்று அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் இன்று நட்சத்திராவிற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தன்னுடைய திருமண புகைப்படங்களை நட்சத்திரா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் திருமண பூரிப்பில் கொள்ளை அழகுடன் மிளிர்கிறார். தன்னுடைய நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறி விட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக நட்சத்திரா தங்களுடைய திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார்.

திருமணத்திற்கு முகூர்த்தக்கால் நடுவது, மெஹந்தி பங்க்ஷன் போன்ற ஒவ்வொரு புகைப்படங்களையும் பார்த்த  ரசிகர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

தற்போது திருமண பந்தத்தில் இணைந்து இருக்கும் நட்சத்திராவிற்கு விஜய் டிவி மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவருக்கு ரசிகர்கள் தங்கள் ஆசிகளையும், தொடர்ந்து சீரியலில் நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுகின்றனர்.

nakshathra
nakshathra