வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? மிரட்டும் ஜூனியர் என்டிஆர்.. அரண்ட ரசிகர்கள்!

பிரம்மாண்ட இயக்குனரான ராஜமௌலி, பாகுபலி திரைப்படத்தை தொடர்ந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ள அடுத்த திரைப்படம் ஆர்ஆர்ஆர். இந்தப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவகன், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றது. இதில் ஜூனியர் என்டிஆர் தன்னுடைய ஸ்டைலில் மாஸ் காட்டியுள்ளார். ஏனென்றால் ட்ரைலரில் புலிக்கு மேல் ஜூனியர் என்டிஆர் பெரும் சப்தத்துடன் உறுமுகிறார். பைக்கை சுழற்றி சுழற்றி தூக்கி வீசிய காட்சிகள் ஜூனியர் என்டிஆரின் ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்கிறது.

அத்துடன் இந்த படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப ரத்தம், ரணம், ரௌத்திரம் ஆகியவற்றை இயக்குனர் ராஜமமௌலி வெளிப்படுத்தியுள்ளார். ஆர்ஆர்ஆர் படத்தில் சிறுவயதில் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் ராம் சரண் மற்றும் என்டிஆர் இருவரும் எதிரெதிர் துருவங்களாக நின்று, இந்தியாவின் ஒற்றுமைக்காக போராடும் போராளிகளாக காண்பிக்க பட்டுள்ளனர்.

மேலும் ட்ரைலரில் காண்பிக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான செட்டுகள், VFX காட்சிகளும் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. டிவிவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் ஆர்ஆர்ஆர் படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமையை லைக்கா நிறுவனம் வாங்கி உள்ளது.

ராஜமௌலியின் பாகுபலி திரைப்படம் பிரம்மாண்டத்தின் உச்சம் என்று இன்றுவரை பேசப்பட்டுள்ள நிலையில், ஆர்ஆர்ஆர் திரைப்படம் விற்பனை ரீதியாக பாகுபலியை விட குறைவு.

ஆனால் ரசிகர்களின் மத்தியில் பாகுபலிக்கு நிகரான வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரும் 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு பிரமாண்டமான முறையில் உலகெங்கும் வெளியாக உள்ள ஆர்ஆர்ஆர்  படத்திற்காக அதிக எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.

Trending News