திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சமந்தா இப்படித்தான்.. நெற்றிப்பொட்டில் அடித்தது போல் ஒற்றை வார்த்தையில் சொன்ன நாகர்ஜுனா!

நயன்தாராவுக்கு பிறகு அதிக சர்ச்சையில் சிக்கும் நடிகையாக மாறியுள்ளார் சமந்தா. முன்னதாக தி ஃபேமிலி மேன் என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து தமிழ் ரசிகர்களை பகைத்துக் கொண்டார். அப்போது சமந்தாவுக்கு அதிக கண்டனங்கள் வலுத்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். அதற்கு காரணம் அதே வெப்சீரிஸ் ஒன்றில் அநியாயத்திற்கு மோசமான காட்சிகளில் நடித்தது தான் என்கிறது சினிமா வட்டாரம்.

ஆனால் இருவருமே தற்போது வரை தங்களுடைய விவாகரத்துக்கான காரணம் இதுதான் என்பதை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இப்படி இருக்கையில் சமந்தாவின் மாமனாரும் பிரபல நடிகருமான நாகர்ஜுனா சமீபத்தில் சமந்தா பற்றி ஒரே வார்த்தையில் கருத்து தெரிவித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Familyman-Cinemapettai.jpg
Familyman-Cinemapettai.jpg

பெரிய குடும்பத்து மருமகளான சமந்தா சினிமாவில் நடித்தது அந்த குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை எனவும், அதுவும் மற்ற நடிகர்களுடன் அநியாயத்திற்கு நெருக்கமாக நடிப்பது நாகசைதன்யாவுக்கே கொஞ்சம் சங்கடத்தை கொடுத்ததாகவும், ஏகப்பட்ட தகவல்கள் வந்து கொண்டிருந்தன.

ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாக சைதன்யா விவாகரத்து பெற்று சென்றாலும் சமந்தா என்றும் எங்களுடைய வீட்டு மகள் தான் என நெற்றிப் பொட்டில் அடித்தது போல் ஒற்றை வார்த்தையில் மொத்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

Trending News