தளபதி 66 ல் இணையும் பிரபல நடன இயக்குனர்.. விஜயுடன் நான்காவது முறையாக கூட்டணி

விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் நடக்க உள்ளது. விஜய் பீஸ்ட் படத்தின் வேலைகளை முடித்துவிட்டு ஒரு சிறிய இடைவெளிக்குப் எடுத்துக்கொண்ட அதன்பிறகு, தளபதி 66 படத்திற்கான பணிகளை தொடங்க உள்ளார்.

விஜய்யின் 66 வது படத்தை வம்சி பைடிபல்லி இயக்கவுள்ளார். தமிழில் தோழா, மகரிஷி உள்ளிட்ட படங்களை வம்சி இயக்கியுள்ளார். பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து தளபதி 66 படத்தையும் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அடுத்தாண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

தளபதி 66 படத்தில் பிரபுதேவா இயக்கிய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்டவர் பிரபுதேவா. விஜயும், பிரபுதேவாவும் நெருங்கிய நண்பர்கள். பிரபுதேவா இயக்குனராக அறிமுகமான முதல் தமிழ் படம் போக்கிரி. இப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

அதன்பிறகு, சில வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா இயக்கிய வில்லு படத்தில் விஜய் நடித்து இருந்தார். ஆனால் இந்தப் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. போக்கிரி, வில்லு இரு படங்களிலும் இடம் பெறும் பாடலில் பிரபு தேவா, விஜய் இருவரும் சேர்ந்து சிறுது நேரம் நடனமாடி இருப்பார்கள்.

பிரபுதேவா இயக்கி அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான ரவுடி ரத்தோர் என்ற ஹிந்தி படத்தில் சிந்தா டா டா சிட்டா சிட்டா பாடலில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் வந்து நடனம் ஆடினார். பிரபுதேவா கட்டாயப் படுத்தியதால் இப்படத்தில் விஜய் நடனம் ஆட சம்மதித்தார்.

இந்நிலையில் விஜய்யின் தளபதி 66 படத்தில் இரண்டு பாடல்களுக்கு பிரபுதேவா நடனப் பயிற்சி அளிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பிரபுதேவாவிடம் விஜய் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டுள்ளாராம்.