புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

இது சண்டைப்பயிற்சி தானா? வேம்புலி பதிவிட்ட வித்தியாசமான போட்டோ.

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் குத்துச் சண்டையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் சார்பட்டா பரம்பரை. இப்படம் அமேசான் பிரைம்யில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்தப்படத்தில் ஆர்யாவுக்கு ஆப்போஸிட்டாக பாக்ஸிங் பண்ணும் வேம்புலி கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர் கூட்டமே உருவாகியுள்ளது.

வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜான் கோக்கன். இவர் 2009ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான லவ் இன் சிங்கப்பூர் படத்தின் மூலம் சினிமாவுக்குள் சிறிய வேடத்தில் அடியெடுத்து வைத்தவர். அதன்பிறகு 2011 ல் சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் சாதாரண அடியாள் கதாபாத்திரத்தில் அடையாளமே தெரியாத நபராக நடித்திருந்தார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தில் வில்லன் ஆடலரசுவின் வலது கரமாக அப்கிரேட் ஆகி நடித்திருந்தார். இவர் தமிழில் நடித்த இரண்டு படங்களும் ரசிகர்களுக்கு அடையாளம் தெரியாமல் இருந்த ஜான் கோக்கனை இயக்குனர் பா ரஞ்சித் சரியாக பயன்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க செய்துள்ளார்.

ஜான் கோக்கன் மனைவி தொலைக்காட்சி தொகுப்பாளர் பூஜா ராமச்சந்திரன். இவர் நண்பன் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின், காதலில் சொதுப்புவது எப்படி என்ற படத்தில் சித்தார்த்துடனும் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

Johnkokkan-Cinemapettai.jpg
Johnkokkan-Cinemapettai.jpg

ஜான் கோக்கன், பூஜா இவர்களின் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் ஜான் கோக்கனுக்கு புகழ் வெளிச்சம் வர தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது தன் காதல் மனைவியுடன் ஜான் கொக்கன் வித்யாசமான முறையில் கவர்ச்சிகரமான குத்துச் சண்டையிட்டு போட்டோஷூட் எடுத்துள்ளார்.அந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது

Trending News