செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

புதிய தொழில் தொடங்கிய லேடி சூப்பர் ஸ்டார்.. இதுக்கு ஒரு எண்டே இல்லையா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தமிழில் அதிக படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.அவ்வப்போது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் நடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். தற்போது அட்லி இயக்கத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக பாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார்.

நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். எப்போதும் படங்களில் பிஸியாக இருக்கும் நயன்தாரா அவ்வப்போது விக்னேஷ் சிவனுடன் சுற்றுலா சென்று வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கான டப்பிங் வேலை நடந்து கொண்டிருக்கிறது.

விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் சேர்ந்து ரவுடி பிக்சர்ஸ் என்கிற பட நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இதுதவிர விரைவு உணவகங்கள் தொழிற்துறையின் முன்னேறி வரும் சாய் வாலா என்கிற டீ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். தற்போது நயன்தாரா மேலும் ஒரு தொழிலை தொடங்கி உள்ளார்.

தி லிப் பாம் கம்பெனி என்கிற பிராண்ட் மூலம் அழகு சாதன பொருள் தயாரிப்பில் அடியெடுத்து வைத்துள்ளார். பிரபல தோல் மருத்துவர் ரெனிடா ராஜன் என்பவருடன் இணைந்து நயன்தாரா இந்த நிறுவனத்தை தொடங்கி உள்ளார். தி லிப் பாம் நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான வகைகளில் லிப் பாம்களை வழங்கி சிறப்பிக்கவுள்ளது.

இத்தொழிலை அறிமுகப்படுத்தும் விதமாக நயன்தாரா விதவிதமான லிப் பாம் உபயோகப்படுத்தி மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது. அரை டஜன் படங்களை கையில் வைத்துள்ள நயன்தாரா, தயாரிப்பு நிறுவனம், டீ கம்பெனி, அழகு சாதன பொருட்கள் என பல துறைகளிலும் கால் பதித்து பணத்தை அள்ளிக் குவிக்கிறார்.

Trending News