சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 1975ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் கே பாலச்சந்தர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டார். அதன் பிறகு மூன்று முடிச்சு திரைப்படத்தில் நல்ல நடிகராக வரவேற்கப்பட்டார். இதை அடுத்து 16 வயதினிலே, காயத்ரி போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்தார்.
புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை ஆகிய திரைப்படங்களில் நேர்மறையான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்பு, அவர் நடித்த போக்கிரி ராஜா, முரட்டுக்காளை, பில்லா போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே அவரை அதிரடி நாயகனாக காட்டியது. இப்போது தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக மாறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, வங்க மொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் ரஜினி நடித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் 1978 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். இவர் நடித்த அகல்விளக்கு திரைப்படம் 1979ஆம் ஆண்டு வெளிவந்தது. கேப்டன் இதுவரை 158 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
விஜயகாந்த் நடித்த நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அன்று முதல் ரசிகர்கள் விஜயகாந்த் கேப்டன் என்று அழைக்கப்பட்டார். விஜயகாந்த் சினிமாவில் மட்டுமல்லாது அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் நடிகர் சங்கத் தலைவர் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
இவ்வாறு சினிமாவில் கொடிகட்டிப் பறந்த இரு நட்சத்திரங்களும் ஒரு படத்தில் கூட சேர்ந்து நடித்ததில்லை. ரஜினி, விஜயகாந்த் இருவரும் பல நடிகர்களுடன் திரைப்படங்களில் சேர்ந்து நடித்துள்ளார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கேப்டன் விஜயகாந்த் இருவரும் சமகால நடிகர்களாக இருந்தும் ஒரு திரைப்படத்தில் கூட சேர்ந்து நடிக்காதற்கு காரணம் இவர்கள் இருவரும் அந்த சமயத்தில் மிகவும் பிஸியான நடிகர்களாக இருந்தார்கள்.
இவர்கள் சேர்ந்து நடிப்பதற்கு ஏற்ப கதைகள் எதுவும் அமையவில்லை. அந்த கால கட்டத்தில் இருவரும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தனர் அதுமட்டுமல்லாது எந்த இயக்குனரும் இருவரையும் இணைத்து நடிக்க வைக்க முயற்சியில் ஈடுபடவில்லை.