தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம் படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. ஏழு வருடம் கழித்து இவர்கள் கூட்டணியில் உருவாகிய படம் வடசென்னை. இயக்குனர் வெற்றிமாறனின் கனவு படமான இப்படம் வட சென்னை மக்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.
சென்னையின் முப்பது ஆண்டுகால வரலாற்றை விவரிக்கும் விதமாக இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் சமுத்திரகனி, டேனியல் பாலாஜி கிஷோர், பவன் என பலர் நடித்திருந்தார்கள். வடசென்னை படத்தை தனுஷ் தயாரித்து, நடித்து இருந்தார்.
வடசென்னை படத்தின் முதல் காட்சியில், சிகரெட்களும், மதுபானமும் மற்றும் மேசை மீதொரு வெட்டரிவாள் வந்து விழுகிறது. அதனால் இப்படம் சென்சார் பிரச்சினையை சந்தித்தது. வடசென்னை படத்திற்கு ஏ சான்றிதழ் மட்டுமே கிடைத்தது. ஆனாலும் வசூலில் எந்த பாதிப்பும் இல்லாமல் வசூலை வாரிக் குவித்தது.
இதுபோன்ற சென்சார் பிரச்சனை உள்ள படங்களை சின்னத்திரை தொலைகாட்சிகளில் ஒளிபரப்பு செய்யமாட்டார்கள். ஆனால் விஜய் டிவி வடசென்னை படத்தில் ஒளிபரப்பு செய்தது. ஏனென்றால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் படங்கள் மீண்டுமொருமுறை சென்சாருக்கு அனுப்பப்படும்.
அவ்வாறு வடசென்னை படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டு சான்றிதழ் கிடைத்தவுடன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது. இதனால் ஒரு சில காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ இப்படியும் ஒரு சங்கதி இருக்கா என்பது தற்போது தெரியவந்துள்ளது.