செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

மூத்த நடிகருடன் நடிக்க மறுக்கும் இளம் நடிகை.. அந்த விஷயத்தில் ரொம்ப மோசமாம்

கோலிவுட்டில் மூத்த நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வரும் நடிகர் ஒருவர், அவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த படத்தின் படப்பிடிப்பு, தளத்தில் நேர்ந்த விபத்து மற்றும் இயக்குனர் தயாரிப்பாளர் இடையே நேர்ந்த பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு பாதியில் நின்றது.

படப்பிடிப்பு இல்லாததால் மூத்த நடிகர், அவரின் அடுத்த படத்தில் நடிக்க சென்றுவிட்டார். இப்படியே இழுபறி நீடித்தால் படம் எடுக்க முடியாது என்பதால் தயாரிப்பாயர் தரப்பில் இருந்து பஞ்சாயத்து பேசி பிரச்சனைகளை சுமூகமாக முடித்து வைத்தனர். இனி எந்த பிரச்சனையும் வராது படத்தை எடுக்கலாம் என நினைக்கும் சமயத்தில் படத்தில் ஒப்பந்தமான நடிகை நடிக்க முடியாது என கூறி விட்டாராம்.

சில பல காரணங்களால் நடிகையால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போகவே தற்போது வேறு ஒரு வீரமான நடிகையிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். ஆனால், நடிகையோ நடிகருடன் நடிக்க தயக்கம் காட்டி வருகிறாராம்.

ஏனென்றால் என்னதான் அவர் மூத்த நடிகராக இருந்தாலும் நடிகைகள் விஷயத்தில் கொஞ்சம் அப்படி இப்படி இருப்பாராம். அதுவும் அவர் இளம் வயதில் பல நடிகைகளை, அவர் வலையில் வீழ்த்தி உள்ளாராம். அதுமட்டுமல்ல அவர் படத்தில் நிச்சயம் நடிகையோடு அதிக நெருக்கம் காட்டும் காட்சிகளும், முத்த காட்சிகளும் இருக்குமாம்.

இதுதவிர அவர் வயது வித்தியாசம் காரணமாகவும் அந்த நடிகை இவருடன் இணைந்து நடிக்க யோசித்து வருகிறாராம். மூத்த நடிகருடன் ஜோடி சேர்ந்து விட்டால் எங்கே மார்க்கெட் குறைந்து விடுமோ என்ற பயமும் நடிகைக்கு உள்ளதாம். எனவே நடிகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

Trending News