
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் கூட்டணியில் வெளியான படையப்பா, முத்து, லிங்கா படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரஜினி நடிப்பில் 2014-ல் வெளியான கோச்சடையான் படத்தில் கேஎஸ் ரவிக்குமார் கதை அமைத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ராணா படத்தில் நடிக்கயிருந்தார் ரஜினி. ராணா படத்தில் பூஜை சென்னையில் உள்ள ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றபோதே ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதையடுத்து ரஜினி சிங்கப்பூருக்கு சென்று உடல் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார். அதனால் அந்தப்படம் அப்போது கிடப்பில் போடப்பட்டது.
அதன் பிறகு ரஜினிகாந்த், கே எஸ் ரவிக்குமார் இருவருமே வேறு படங்களில் பிஸியாக இருந்தார். சமீபத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார் ரஜினி.
இதனிடையே சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் தங்கள் லட்சிய திட்டமான ராணா திரைப்படத்தை மீண்டும் எடுப்பதற்காக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பார் என தெரிகிறது.
ராணா படம் ரஜினியின் கதை, இதனால் இப்படத்தின் உரிமம் ரஜினியிடம் உள்ளது. இப்படத்திற்கு திரைக்கதை கேஎஸ் ரவிக்குமார் எழுதியுள்ளார். ராணா படம் மீண்டும் எப்போது எடுக்க போகிறார்கள் என தெரியாத நிலையில் தற்போது ரஜினிகாந்த் கேஎஸ் ரவிக்குமாரிடம் ஒரு கதை ரெடி பண்ணச் சொல்லி இருக்கிறாராம்.
