வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

30 வயதுக்கு மேலாகியும் கவர்ச்சி விருந்து கொடுக்கும் 4 நடிகைகள்.. நயன்தாரா முதல் சமந்தா வரை

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சில நடிகைகள் இளைஞர்களின் கனவு நாயகியாக இருப்பார்கள். அவ்வாறு தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக உள்ள 4 நடிகைகள் முப்பது வயதை கடந்தும் மிக அழகாகக் காட்டிக் கொள்ள விதவிதமான கிளாமர் ஆடைகளை அணிந்து ரசிகர்கள் கவர்ந்து வருகிறார்கள். தற்போது வரும் இளம் நடிகைகளுக்கும் டப் கொடுக்கும் அளவிற்கு இவர்கள் கவர்ச்சி காட்டி வருகிறார்கள்.

நயன்தாரா: தமிழ்சினிமாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நயன்தாரா நடித்து வருகிறார். ஆனால், தெலுங்கு சினிமாவில் படு கிளாமராக நடித்தால் மட்டுமே தனது இமேஜைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். அதனால் தெலுங்கு சினிமாவில் அதிகமாக கவர்ச்சி காட்டி வருகிறார். நயன்தாராவுக்கு வயது ஏறிக் கொண்டே செல்வதால், அந்த இமேஜை தக்க வைத்துக் கொள்வதற்காக கிளாமரான ரோலில் நடித்து வருகிறார். தப்போதும் நயன் உச்சத்தில் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

தமன்னா: தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு காலகட்டத்தில் மிகவும் பிஸியாக இருந்த நடிகை தமன்னா. தற்போது படங்கள் இன்றி ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் அளவிற்கு சென்றுவிட்டார். ஆரம்பத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். தற்போது கதைக்கு தேவை என்றால் கவர்ச்சி காட்ட கூட தயாராக உள்ளார். தமன்னா படுகவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

காஜல் அகர்வால்: தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளவர் காஜல் அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் அஜித், விஜய், தனுஷ் போன்ற பிரபல முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார். எப்போதுமே தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி காட்டும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அந்த வகையில் எல்லாத்துக்குமே ரெடி என காஜல் அகர்வாலை கிட்டத்தட்ட பல வருடங்களாக திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி வருகிறார்.

சமந்தா: தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. ஆரம்ப காலத்தில் இவர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. பின்னர் நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து, முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக உள்ளார். நாக சைதன்யாவுடன் விவாகரத்துக்குப் பின் முன்பை விட சினிமாவில் ஆர்வமாக நடித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே சமூக வலைதள பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை அதிகமாக பதிவிட்டு வருகிறார். தற்போது சமந்தா புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு படு கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டுள்ளார்.

Trending News