வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சூர்யா செய்த தவறை நீ செய்யக்கூடாது.. கார்த்திக்கை எச்சரித்த சிவகுமார்

தமிழ் சினிமாவில் இன்றும் அதே இளமையுடன் இருப்பவர் மூத்த நடிகர் சிவகுமார். இவர் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ரஜினி, கமல், விஜய் போன்ற மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்த பெருமைக்குரியவர்.

தீவிர முருக பக்தரான இவர் மேடைகளில் பல சொற்பொழிவு நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். தமிழ் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை மதிக்கும் சிவகுமார் தன் பிள்ளைகளுக்கும் அதையே கற்றுக் கொடுத்துள்ளார்.

அவருடைய இரண்டாவது மகனான நடிகர் கார்த்தி பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த கார்த்தி பையா திரைப்படத்தில் நடித்த போது நடிகை தமன்னாவுடன் காதல் வயப்பட்டார்.

இது பற்றி ஊடகங்களில் பல கிசுகிசுக்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் இது குறித்து எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தனர். ஏற்கனவே நடிகர் சூர்யா சக நடிகையான ஜோதிகாவை திருமணம் செய்ததில் மன வருத்தத்தில் இருந்த சிவகுமார், கார்த்தியின் இந்த காதலால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சிவகுமார் தன் பிள்ளைகளுக்கு தன்னுடைய விருப்பப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தார். ஆனால் நடிகர் சூர்யா அதை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் தன் இளைய மகன் கார்த்தியாவது தன் விருப்பப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணினார்.

அதன் காரணமாக அவர் கார்த்தியை கூப்பிட்டு இந்த காதல் எல்லாம் சரிப்பட்டு வராது உனக்கு நான் வேறு பெண் பார்த்து விட்டேன் அதனால் இந்த காதலை விட்டுவிடு என்று எச்சரித்திருக்கிறார். அப்பாவிற்கு பயந்த பிள்ளையான கார்த்திக் அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

மேலும் நடிகை தமன்னாவுடன் தனக்கு இருந்த காதலையும் முறித்துக் கொண்டுள்ளார். நம்ம சொந்த பந்தத்தில் ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள் என்று கண்டிஷனாக கூறிவிட்டார் சிவகுமார். அதன் பிறகு தன் அப்பாவின் விருப்பப்படி அவர் பார்த்த பெண்ணான ரஞ்சனியை திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிகளுக்கு உமையாள் என்ற பெண் குழந்தை இருக்கிறார்.

Trending News