வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஒரு சூப்பர்ஸ்டாரா இல்லாட்டாலும் தனுஷ் மாதிரியாவது.. பிடிகொடுக்காத ஐஸ்வர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. ஆனால் அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வரவேற்பை பெறாமல் சுமாரான வெற்றியை பதிவு செய்தது. இருந்தாலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்து படம் வெற்றி பெற்று வருவதாக புரோமோஷனல் ஈடுபட்டு பல்வேறு விதமான வித்தைகளை கையாண்டு வருகிறது.

ரஜினிகாந்த் பொறுத்தவரை யாருடைய வாழ்க்கையிலும் தலையிடுவது கிடையாது. அப்படித்தான் இவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே அஸ்வின் ராம்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு சில கருத்து வேறுபாடுகளால் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றனர். பின்பு பிரபல தொழிலதிபரான விசாகன் வணங்காமுடி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

விசாகன் அமெரிக்கா சென்று சினிமா கலையை கற்றுக்கொண்டார். மேலும் சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால் வஞ்சகர் உலகம் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு சினிமா துறையை விட்டு விலகி தொழில் துறையில் கவனம் செலுத்தி வந்தார்.

தற்போது சௌந்தர்யா மற்றும் ரஜினிகாந்த் இருவரும் சினிமாத்துறையில் உள்ளதால் சௌந்தர்யா கணவர் விசாகன்க்கும் சினிமா துறையில் நடிக்க ஆசை வந்துள்ளது. அதனால் படத்தில் நடிப்பதற்கான ஆசையை வெளிப்படையாக கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல் ஒரு சில இயக்குனர்கள் விசாகன்னிடம் கதையைக் கூறி வருவதாகவும் கதை பிடித்துப் போனால் படத்தில் விசாகன் நடிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனைக் கேள்விப்பட்ட சௌந்தர்யா விசாகன்னிடம் நீங்கள் படத்தில் நடிக்க கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு பிடிக்கவில்லை எனவும் காரசாரமாக கூறியுள்ளார். அதற்கு விசாகன் கொஞ்சநாள் சினிமாவில் நடிக்கிறேன் என கூறியும் அதற்கு சம்மதம் தெரிவிக்க மறுத்துள்ளார். அதற்குக் காரணம் சினிமா துறையில் நுழைந்து விட்டால் அடுத்தடுத்து கதாநாயகிகளுடன் பழக ஆரம்பித்து விடுவார்கள்.

அதன் பிறகு ஒரு சில பிரச்சனைகள் சந்திக்க நேரிடும் என்பதற்காகவே சௌந்தர்யா மறைமுகமாக நடிப்பதற்கு மறுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விசாகன் படத்தில் நடிப்பதற்கு தொடர்ந்து கதையை கேட்டு வருவதால் ரஜினிகாந்து இந்த பிரச்சினைக்கு நுழைந்து ஏதேனும் தீர்ப்பு சொல்வார் எனவும் அவரது நெருங்கிய நண்பர்கள் கூறி வருகின்றனர்.

Trending News