கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிற்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. என்னதான் இவர் கன்னட சினிமாவில் அறிமுகமானாலும், தெலுங்கு சினிமா தான் இவருக்கு பேரும் புகழும் பெற்று கொடுத்தது.
விஜய் தேவர்கொண்டா உடன் 2018ம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம், என்ற படத்தின் மூலம் தெலுங்கு மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களிடம் இவர் நன்கு பிரபலம் அடைந்தார். குறிப்பாக ஒரு பாடலுக்கு இடுப்பை காட்டியபடி சேலையை சரி செய்வார். இந்த காட்சி இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பார்த்து ரசிக்கப்பட்டு தான் வருகிறது.
ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய படங்களில் மட்டும் தான் நடித்து கொண்டிருந்தார். ஆனால் இவரது புகழ் மென்மேலும் உயர பாலிவுட்டிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து தற்போது அங்கும் தனது கால் பதித்துள்ளார்.
இவர் தமிழில் சுல்தான் என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார். ஏனென்றால் ராஷ்மிகா நடித்த முதல் தமிழ் திரைப்படம் சுல்தான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர் அவரது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் அடடா நம்ம ராஷ்மிகா மந்தனா இப்படி போஸ் கொடுத்துள்ளார் என விமர்சித்து வருகின்றனர்.