வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

ஹைதராபாத்திலிருந்து செல்லத்த பார்க்க பறந்து வந்த சமந்தா.. யாருன்னு நீங்களே பாருங்க!

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் சினிமாவில் தைரியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருவதன் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

அந்த வரிசையில் அவர் தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் புஷ்பா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். சமந்தா கவர்ச்சி நடனம் ஆடிய அந்த பாடல் தற்போது பெரிய சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

ஆனால் தன்னைப் பற்றி வரும் விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளை பற்றி எல்லாம் கவலைப்படாத சமந்தா சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது இந்தி மற்றும் ஆங்கில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தனது பிஸியான நேரத்திலும் சமந்தா நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, தனக்கு பிடித்தமானவற்றை செய்வது என்று ஜாலியாகவும் இருந்து வருகிறார். அப்படி ஒரு விஷயம்தான் இப்போது நடந்துள்ளது. அதாவது நடிகைகள் என்றாலே நாய் குட்டியை குழந்தை போல வளர்ப்பார்கள் என்ற செய்தி நமக்கு புதிதல்ல.

அதேபோல் சமந்தாவும் சென்னையில் உள்ள தனது வீட்டில் நாய்களை வளர்த்து வருகிறார். அவருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த நாய்க்குட்டிகள் உடன் விளையாடி பொழுதை கழிப்பார். அப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் இருந்த சமந்தா நாய்களை பார்ப்பதற்காகவே சென்னை வந்துள்ளார்.

ஹைதராபாத்தில் இருந்து விமானத்தில் சென்னை வந்த சமந்தா தனது நாய் குட்டிகளுடன் 3 மணி நேரம் செலவிட்டுள்ளார். அதன் பிறகு அவர் மீண்டும் ஹைதராபாத் திரும்பிச் சென்றுள்ளார். தன் நாய்க்குட்டிகளை பார்ப்பதற்காக மட்டும் சமந்தா விமானத்தில் பறந்து வந்த இந்த செய்தி சற்றே வியப்புக்குரியது.

samantha-dog
samantha-dog

சமீபகாலமாக சமந்தா சந்தித்து வந்த தொடர் பிரச்சனைகள், திருமண முறிவு என்று சிறிது மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தார். இதை அவரே ஒருமுறை பேட்டியில் தெரிவித்திருந்தார். அதிலிருந்து வெளியே வருவதற்காக சமந்தா இதுபோன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.

Trending News