வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

கதறிக் கதறி அழுத பிரியங்கா.. வெறி பிடித்து முட்டி மோதிய நிரூப்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது 70 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் போட்டிகளும் கடந்த சில வாரங்களாகவே கடுமையாக கொடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அந்தவகையில் நேற்று நடைபெற்ற தலைவருக்கான டாஸ்கின்போது நிரூப் மற்றும் பிரியங்கா இருவரிடம் காரசாரமான விவாதம் ஏற்பட்டது.

ஏனென்றால் தலைவருக்கான போட்டியில் ஏன் வெற்றி பெற வேண்டும்? என விளக்கமளிக்கும் போது நிரூப் மட்டும், ‘எனக்கு நாமினேஷனுக்கு செல்ல பயமாக இருக்கிறது’ என்று சொன்னதும் பிரியங்காவிற்கு சுர்ருன்னு கோபம் வந்துவிட்டது.

ஏனென்றால் நிரூப் கடந்த பஸ் டாஸ்க்கிலும் இதே காரணத்தை சொல்லி, பலருடைய அனுதாபத்தை பெற்ற அந்த டாஸ்க்கில் வெற்றி பெற்று எலிமினேஷனிலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். அதே காரணத்தை மீண்டும் மீண்டும் சொல்லி கடுப்பேத்தாத என்று நிரூப்பிடம் பிரியங்கா தன்னுடைய பாணியில் சொன்னார்.

இதனால் ஆத்திரமடைந்த நிரூப், கயிற்றை விட்டு விட்டு போட்டியில் இருந்து விலகி விட்டார். இருப்பினும் அவர் தோல்வியை சந்தித்ததற்கு பிரியங்கா தான் காரணம் என்று திட்டியதுடன், ‘மனதில் வைத்துக்கொண்டே பழிவாங்கும் நரியக்கா, ஈவில், பாய்சன், மற்றவர்களின் கஷ்டத்தில் சந்தோஷப்படுகிறவள், உனக்கு பிடிக்கலைன்னா சாக்கடையில் குழி தோண்டி புதைத்து விடுவாய்’ என்ற வார்த்தைகளினால் பிரியங்காவிடம் நிரூப் கடுமையாகப் பேசினார்.

ஆனால்பிரியங்கா நிரூப்பை நண்பனாக நினைத்து பல இடங்களில் சப்போர்ட்டாக பேசி இருக்கிறார். இருப்பினும் நிரூப்பிடம் இப்படிப்பட்ட வார்த்தைகளை கேட்டதும் பிரியங்காவிற்கு மன அழுத்தம் ஏற்பட்டு கொஞ்ச நேரம் அழுது கொண்டே இருந்தார்.

அத்துடன் நிரூப்ப்பிற்கு கடைசி வரை விளையாண்டு தலைவர் பதவியை பெற்று விட வேண்டும் என எண்ணிக்கொண்டிருந்த நிலையில், ஏமாற்றமே கிடைத்துவிட்டது. ஆனால் அதற்காக பிரியங்காவை இஷ்டத்திற்கு பேசியது போட்டியாளர்கள் மட்டுமல்ல ரசிகர்களுக்கும் பிடிக்கவில்லை.

Trending News