விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 5 இறுதிக்கட்டத்தை நெருங்க இன்னும் இரண்டு மூன்று வாரங்களிலே உள்ளது. இந்த சீசனின் தெரிந்த முகங்களை விட தெரியாத முகங்கள் தான் அதிகம். அந்த வகையில் பரிச்சயமில்லாத தாமரை இந்த சீசன் மூலம் மிகவும் பிரபலமானவர்.
தாமரை மேடை நாடக கலைஞர். இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஓரிரு நாட்களிலேயே வெள்ளந்தியான குணத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு அடால் தடாலென சண்டை காட்சிகளிலும் பிரமிக்க வைத்தார். ஆரம்பத்தில் ஒரு சில வாரங்கள் மட்டுமே தாக்குப் பிடிப்பார் என கருதப்பட்ட நிலையில் தற்போது டாப் 10 போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார்.
தாமரை ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தகப்பனான ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். பின்பு இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் தாமரையின் காதல் கணவரும், அவருடைய மகனும் வந்தார்கள்.

பிக் பாஸ் வீட்டுக்குள் முதலில் தாமரையின் மகன் வந்ததும் அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டு சந்தோஷத்தில் இருந்தார் தாமரை. அதேபோல் தாமரையின் கணவர் வந்த போதும் தாமரை உற்சாகத்தின் எல்லையில் இருந்தார். தாமரையின் தலையில் அவரது கணவர் பூ வைத்துவிட்ட நெகிழ்ச்சியான காட்சி அனைவரையும் கவர்ந்தது.
தாமரையின் கணவர் ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும் போது நீங்கள்தான் தாமரையின் கணவர், என பலரும் கேட்கிறார்கள் என பிக் பாஸ் வீட்டில் தாமரையிடம் சொன்னார். அதைக் கேட்டவுடன் தாமரை மகிழ்ச்சியில் இருந்தார். இந்நிலையில் தற்போதும் தாமரையின் கணவர் ஜவுளி கடையில் வேலை பார்க்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.