விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னணியில் இருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்பத்தை மையப்படுத்தி ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகளின் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடைக்குட்டி கண்ணன் தன்னுடைய குடும்பத்துடன் தற்போது ஒன்றாக இருக்கிறார். அங்கு கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்குவதற்கு தனி ரூம் இல்லாமல் ஹாலில் தங்குகின்றனர்.
அப்போது வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்துக்கொண்டு கண்ணன், ஐஸ்வர்யாவுடன் ரொமான்ஸ் செய்கிறார். அப்பொழுது எதேச்சையாக அங்கு வரும் மூர்த்தி அதைப் பார்த்துவிட்டு சங்கடத்துடன் செல்கிறார்.
மூர்த்தியை அங்கு எதிர்பார்க்காத கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தபடி நிற்கின்றனர். வீட்டிற்குள் வரும் மூர்த்தி தன் மனைவி தனத்திடம், அவர்கள் இருவரும் தங்குவதற்கு ரூம் இல்லாமல் இருப்பது சரியாக வராது என்று சொல்கிறார்.
உடனே என்ன செய்வது என்று யோசிக்கும் தனம் தன்னுடைய ரூமை அவர்களுக்கு கொடுக்க முன்வருகிறார். பின்னர் கண்ணனிடம் செல்லும் தனம் நீங்கள் இருவரும் எங்கள் ரூமில் படுத்து தூங்குங்கள் என்று சொல்கிறார்.
அதை மறுக்கும் கண்ணனிடம் நாங்கள் சொல்வதை மட்டும் கேட்டால் போதும் என்று வலுக்கட்டாயமாக அவர்களை தங்கள் ரூமுக்கு அனுப்பி வைக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வரும் வாரம் கண்ணன், ஐஸ்வர்யா சம்பந்தப்பட்ட இந்த காட்சிகள் தான் வரவிருக்கிறது.
சில காலங்களுக்கு முன்பு எல்லாம் பல கூட்டுக் குடும்பங்களில் இது போன்று எதார்த்தமான மற்றும் தர்ம சங்கடமான பல சம்பவங்கள் நடப்பதுண்டு. தற்போது அந்த நிகழ்வுகளை பாண்டியன் ஸ்டோர்ஸ் நமக்கு காட்டுகிறது.