ஆர் ஆர் ஆர் படத்திற்கு எதிராக கிளம்பிய அஜித் ரசிகர்கள்.. பரபரப்பான மதுரை

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தின் க்ளிம்ஸ், டீசர், மேக்கிங் வீடியோ, விசில் தீம் என ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்ததாக வலிமை படத்தின் டிரைலரை எதிர்நோக்கி அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
வலிமை படமும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீசாக உள்ளது. வலிமை படம் ஜனவரி 13 அல்லது 14-ம் தேதி வெளியாகும் என்று பரவலாக பேசப்படுகிறது.

இதையொட்டி பொங்கல் பண்டிகைக்கு ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியாகுவதால் அஜித் ரசிகர்கள் சிலர் கொந்தளிப்பில் உள்ளனர். பாகுபலி இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ஆர் ஆர் ஆர். பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்துள்ளார்கள்.

valimai
valimai

ஆர் ஆர் ஆர் படத்திற்கு பாகுபலி படத்தில் இசையமைத்த கீரவாணி இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அண்மையில் வெளியாகி பிரம்மிப்பை ஏற்படுத்தியது.

இப்படம் ஜனவரி மாதம் 7-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் பொங்கலுக்கு வலிமை படமும் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுவதால் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் போஸ்டர்களை ஒட்டி வருகிறார்கள். அதிலும் போஸ்டர்களுக்கு பெயர் போன மதுரையில் அஜித் ரசிகர்கள் ஆர் ஆர் ஆர் படத்திற்கு எதிராக போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளார்கள். இந்த போஸ்டர் மதுரை சுற்று வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

- Advertisement -