முன்னணி ஹீரோவை வேண்டாமென ஒதுக்கிய பாரதிராஜா.. இப்ப அங்க அவர் தான் சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக இருப்பது போல, தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி. தெலுங்கு உட்பட மற்ற மொழிகளிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

அவர் சினிமாவில் 40 வருடங்களில், 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இதுவரை நடித்து சாதனை புரிந்துள்ளார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான சிரஞ்சீவி அவருடன் இணைந்து ராணுவ வீரன் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் அவர் நடிப்பதற்கு முன்பு ஒரு முறை பாரதிராஜா இயக்க இருந்த படத்தின் ஆடிஷனில் சிரஞ்சீவி கலந்து கொண்டார்.

அப்போது பாரதிராஜா, சிரஞ்சீவியை வேண்டாமென ரிஜக்ட் செய்து விட்டாராம். பின்னர் அந்த படம் சுதாகர் மற்றும் ராதிகா நடிப்பில் கிழக்கே போகும் ரயில் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது. தமிழ் படங்களில் ரிஜெக்ட் ஆன பிறகு சிரஞ்சீவி தெலுங்கு பக்கம் சென்று விட்டார். அங்கு அவர் பல திரைப்படங்களில் நடித்து இன்று ஒரு சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் இவருடைய மகன் ராம் சரணும் ஒரு முன்னணி நடிகராக இருக்கிறார். இதுதவிர நடிகர் அல்லு அர்ஜுன், அல்லு சிரிஷ், பவன் கல்யாண் என்று அனைவரும் சிரஞ்சீவியின் நெருங்கிய உறவினர்கள் ஆவர்.

சாதாரணமாக ஆரம்பித்த இவருடைய திரைப்பயணம் இன்று அசைக்க முடியாத அளவிற்கு பேரையும், புகழையும் அவருக்கு கொடுத்துள்ளது. அப்படிப்பட்ட இவரை பாரதிராஜா வேண்டாம் என ஒதுக்கியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கே போகும் ரயில் மூலம் பாரதிராஜா அறிமுகப்படுத்திய சுதாகர் அந்த திரைப்படத்திற்கு பிறகு முன்னணி நடிகராக இருந்தாலும், இன்று அவர் தெலுங்கு திரையுலகில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.