வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பிரம்மாண்ட கூட்டணியுடன் ரீ என்ட்ரி கொடுக்கும் டிடி.. புத்தாண்டு சர்ப்ரைஸ்

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. அவருக்கு சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் காபி வித் டிடி உட்பட பல விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

தற்போது பெரிய திரையில் கவனம் செலுத்தி வரும் டிடி துருவ நட்சத்திரம், ஜோஸ்வா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபகாலமாக விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்காமல், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது என்று ஜாலியாக பொழுதை கழித்து வந்தார்.

தற்போது ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்காக டிடி விஜய் டிவிக்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சோசியல் மீடியாவில் புகைப்படத்துடன் வெளியிட்டு உள்ளார். அதில் டிடி, ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோருடன் இணைந்து இருக்கிறார்.

பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலக அளவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை விளம்பரம் செய்யும் பொருட்டு படக்குழுவினர் அனைவரும் பிஸியாக இருக்கின்றனர். அந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சி வரும் புத்தாண்டு தினத்தன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

RRR
RRR

அதில் டி டி, ஆர்ஆர்ஆர் பட குழுவினரை பேட்டி எடுக்க உள்ளார். இதுகுறித்த டிடி தனது சோசியல் மீடியாவில், காபி வித் டிடி போன்ற ஒரு நிகழ்ச்சி நடந்தது. அவர்கள் மிகவும் சுவாரசியமான, நம்ப முடியாத விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். அது என்ன என்பதை அறிய ப்ரோமோ வுக்காக காத்திருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு டிடி விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால், அவருடைய ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தில் உள்ளனர். மேலும் ஒரு பிரம்மாண்ட படக் குழுவின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

rajamouli
rajamouli

Trending News