வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

இந்தியளவில் கம்மியான நேரத்தில் அதிக வியூஸ் கடந்த டாப் 5 ட்ரைலர்கள்.. 2 இடத்தை தட்டி தூக்கி அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் எப்போதும் எதிர்பார்ப்புகள் அதிகமாக தான் இருக்கும். இதனால் படத்தின் டிரைலர்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருப்பார்கள். அந்த வகையில் பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் இணையதளமான யூடியூப்பில் மிகக் குறுகிய நேரத்திலேயே 1 மில்லியன் லைக் பெற்ற டிரைய்லர்களின் படங்களை பார்க்கலாம்.

பிகில்: அட்லி இயக்கத்தில் 2019 இல் வெளியான திரைப்படம் பிகில். விஜய் இரட்டை வேடத்தில் நடித்த பிகில் திரைப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி 30 நிமிடத்திலேயே 1 மில்லியன் லைக்ஸ் பெற்றிருந்தது.

தில் பேச்சாரா: ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் முகேஷ் சப்ரா இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இறுதி படமான தில் பேச்சாரா படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி பலரையும் கண்ணீரில் ஆழ்த்தியது. தில் பேச்சாரா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி 97 நிமிடத்தில் யூடியூபில் 1 மில்லியன் லைக்ஸ் பெற்றது.

வலிமை: வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இப்படம் பொங்கல் பண்டிகைக்கு முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி அஜித் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி 3 மணி நேரம் 25 நிமிடங்களில் 1 மில்லியன் லைக்ஸ் பெற்றிருந்தது.

விஸ்வாசம்: சிவா இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தில் நயன்தாரா, விவேக், கோவை சரளா, யோகிபாபு ஆகியோர் நடித்திருந்தனர். விஸ்வாசம் படத்தின் டிரைலர் வெளியாகி 7 மணி 30 நிமிடங்களில் 1 மில்லியன் லைக்ஸ் பெற்றது.

ஆர்ஆர்ஆர்: பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ஆர்ஆர்ஆர். மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட ஆர்ஆர்ஆர் படம் ஜனவரி 7ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி 7 மணி 45 நிமிடங்களில் அதிக லைக்ஸ் பெற்றது.

சூர்யவன்ஷி: அக்ஷய் குமார், கத்ரினா கைஃப், ரன்வீர் சிங் நடிப்பில் ரோகித் ஷெட்டி இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான சூர்யவன்ஷி. இப்படத்தின் டிரைலர் யூடியூபில் வெளியாகி 18 மணிநேரம் 10 நிமிடங்களில் அதிக பார்வையாளர்கள் லைக்ஸ் செய்து இருந்தார்கள். சூர்யவன்ஷி படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனை படைத்தது.

Trending News