பிரியா பவானி சங்கர் நடிப்பில் OTTயில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது பிளட் மணி என்ற படம். இந்த படத்தில் துபாய் நாட்டிற்கு வேலைக்கு சென்ற இரண்டு அப்பாவிகள் அங்கே ஒரு கொலை குற்றத்திற்காக கைதாகி சிறையில் மாட்டிக்கொள்வார்கள்.
அந்தப் படத்தில் அவர்கள் துபாய் நாட்டில் விபத்து ஏற்படுத்தி ஒரு பெண்ணை கொன்றதாகவும். அதற்கு அவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டதாகவும் கதை நகரும்.
அவர்களை நியூஸ் சேனலில் வேலை பார்க்கும் பிரியா பவானி சங்கர் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. பிளட் மணி என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு, பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் அதற்கு ஈடாக கொடுக்கும் பணம். அந்த படத்தில் அவர்கள் பிளட் மணிகொடுத்தும் பயன் இல்லாமல், தூக்கு தண்டனை கொடுப்பது போன்று காட்சிகள் வரும்.
இது ஒருபுறமிருக்க இந்தப் படத்தை பார்த்த கேரள தம்பதியினர் அவர்கள் வாழ்வில் நடந்தது போன்றே இந்த படம் இருந்ததாக தெரிவித்துள்ளனர். இதே மாதிரி அவர்களும் துபாய் நாட்டில் விபத்து ஏற்படுத்திக் பிளட் மணி கொடுத்து மீண்டு வந்துள்ளனர்.
நமது வாழ்க்கையில் ஏற்பட்ட கதை, திரையில் வந்ததை பார்த்த அவர்கள் அந்த படத்தின் கதையை எழுதி இயக்கிய நபில் அஹமதைய அழைத்து விருந்து கொடுத்துள்ளனர். நபில் அஹமத் எப்படி இந்த மாதிரி ஒரு கதையை எடுத்தார், இதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்தது யார் என்பது பற்றி, அந்த விருந்தில் பாதிக்கப்பட்ட குடும்பம் கலந்துரையாடினார்கள்.