விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முன்னதாக வெளியேறிய போட்டியாளர் ஒருவர், இவர் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு நபர்.
அபிநய் பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி ஆகியோரின் மகள் வழி பேரன். பிக்பாஸ் வீட்டில் அபினை மற்றும் பாவனி இருவரும் ஆரம்பத்தில் இருந்தே நல்ல நண்பர்களாக இருந்தனர். இதனிடையே அபிநய் தன்னை காதலிப்பதாக சந்தேகித்த பாவனி அவரிடமே இதுகுறித்து நேரடியாகவே கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அபிநய், அப்படி எதுவும் இல்லை நமக்குள் நல்ல நட்பு மட்டும் இருப்பதாக கூறினார். பின்னர், இருவரும் நண்பர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ட்ரூத் அண்ட் டேர் விளையாடினார்கள். அப்போது அபினயிடம் நீ பாவனியை லவ் பண்ணுறியா என அனைவரின் முன்னிலையிலும் கேள்வி கேட்டார் ராஜு.
அதைக்கேட்டு ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஆச்சரியம் அடைந்தார்கள். பின்பு இது உண்மைதானோ என நம்ப ஆரம்பித்தார்கள். இதைத்தொடர்ந்து அப்போது அபிநய் மனைவி அபர்ணா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்படி இருந்தாலும் இறுதியில் நீ எப்படிபட்ட நபர் என்பது எனக்கு தெரியும். என்னை தவிர உன்னை பற்றி யாருக்கும் தெரியாது. எப்போதும் உன்னை காதலிப்பேன் என்று பதிவிட்டு இருந்தார்.
ஆனால் தற்போது அபர்ணா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய கணவர் பெயரை நீக்கியுள்ளார். அபர்ணா அபிநய் என்ற பெயரை நீக்கி அபர்ணா வரதராஜன் என்று மாற்றியுள்ளார். இதேபோல் நடிகை சமந்தா போன்ற நடிகைகள் தனது கணவன் பெயரை நீக்கிய பின்பு விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக அபினையிடம் பாவனி விஷயத்தைப் பற்றி உங்கள் மனைவி என்ன சொன்னார்கள் என கேட்டிருந்தார்கள். அதற்கு எல்லா மனைவிகளை போலதான் அவரும் ரியாக்ட் செய்தார். நமக்குள் நடக்கும் விஷயத்தை எப்படி நீங்கள் கையாளுகிறீர்கள் என்பதுதான் முக்கியம். இறுதியில் குடும்பம்தான் அனைத்தும் என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் அபர்ணாவின் இந்த செயலால் அபிநய் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளார்கள். ஏற்கனவே சமந்தா இதேபோல்தான் தனது கணவனின் பெயரை நீக்கிய பின் விவாகரத்து வரை சென்றது. இதனால் இது போன்ற தவறான முடிவுகளை எடுத்து விடக்கூடாது என்பதுதான் ரசிகர்களின் வேண்டுகோள்.
