உலக அளவில் தனது இசையின் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்து வருபவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். இவர் ஸ்லம் டாக் மில்லியனர் என்ற திரைப்படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை பெற்று தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தியுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தற்போது தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார்.
அவருக்கு கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் என்று மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். அதில் மூத்த மகளான கதீஜா, ஏ ஆர் ரகுமான் இசையமைத்த எந்திரன் திரைப்படத்தில் புதிய மனிதா என்ற பாடலை பாடியுள்ளார். அந்தப் பாடலை பாடும்போது அவருக்கு பதினான்கு வயது மட்டுமே ஆனது. தற்போது 20 வயதான கதீஜாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. சவுண்ட் இன்ஜினியராக இருக்கும் ரியாஸ்தீன் ரியான் என்பவருடன் தான் இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை கதீஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, என்னுடைய பிறந்த நாளான டிசம்பர் 29 அன்று எனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் காரணத்தால் என் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இசை புயல் வீட்டில் நடந்த விசேஷம் குறித்த இந்த தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்து, இன்று புகழின் உச்சியில் இருக்கும் ஏ ஆர் ரகுமானுக்கு மருமகனாக செல்லும் ரியாஸ்தீன் ரியானை, நீங்க ரொம்பவும் அதிர்ஷ்டக்காரர் என்று ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.