வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

களி கிண்டி கப்பை வென்ற சரவணன்.. ஒலிம்பிக்கில் வென்ற உற்சாகத்தில் வரவேற்ற ஊர் மக்கள்

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலின் கதாநாயகன் சரவணன், தற்போது சமையல் போட்டியில் கலந்து கொள்வதற்காக தென்காசியில் இருந்து குடும்பத்தோடு சென்னை வந்துள்ளார். இந்நிலையில் பல தடைகளை மீறி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த சரவணன் வெற்றியாளராக மாறுவதற்கு கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

அதற்காக வெளிநாட்டிலிருந்து வந்திருந்த நடுவரை கவர்வதற்காக போட்டியாளர்கள் விதவிதமான வெளிநாட்டு உணவுகளை சமைத்துத் தர தங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் வெளிநாட்டிலிருந்து நம் நாட்டிற்கு வருகை தந்துள்ள நடுவருக்கு, நம் நாட்டு உணவு தான் வெளிநாட்டு உணவாக இருக்கும் என்று எண்ணிய சரவணன் தமிழர்களின் பாரம்பரிய உணவை சமைத்து தர முடிவெடுத்துள்ளார்.

இதற்காக சமையல் போட்டியில் சரவணன் சுவையான கேப்பை கூழ் கிண்டி வெளிநாட்டு நடுவரை அசத்தினார். எனவே மற்ற போட்டியாளர்களை காட்டிலும் சரவணன் சமைத்த கேப்பைக் களி தான் நடுவரை வெகுவாக கவர்ந்ததால் அவர்தான் வெற்றியாளர் என்று அறிவித்து, 5 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

இதனால் சந்தியா உட்பட சரவணன் குடும்பமே பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அத்துடன் வெற்றியாளராக சரவணன் தென்காசி திரும்பியதும், அவரது ஊரில் இருப்பவர்கள் அனைவரும் மேளதாளத்துடன் சரவணனுக்கு அமோக வரவேற்பளித்தனர்.

மேலும் சரவணன் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னை சென்றபோது, அர்ச்சனா சரவணனின் ஸ்வீட் கடையில் ஏகப்பட்ட தில்லுமுல்லு வேலைகளை செய்திருப்பது, இனிவரும் நாட்களில் சந்தியா மற்றும் சரவணனுக்கு தெரியவர அவர்கள் அந்தப் பிரச்சினையை எவ்வாறு சமாளிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

raja-rani2-cinemapettai
raja-rani2-cinemapettai

மேலும் நிஜ வாழ்க்கையில் கர்ப்பமாக இருக்கும் ஆலியா மானசா, ராஜா ராணி2 சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் அவர் கர்ப்பமாக இருப்பதாக இனி வரும் நாட்களில் காட்டப்பட உள்ளதால், சந்தியா சரவணன் இடையே ரொமான்ஸ் காட்சிகளும் கொஞ்சம் தூக்கலாக சீரியலில் ஒளிபரப்பப்பட உள்ளது.

Trending News