திங்கட்கிழமை, மார்ச் 17, 2025

வசூலில் புதிய சாதனை படைத்த புஷ்பா.. இத்தனை கோடியா ஆச்சரியத்தில் திரையுலகம்

ஒரு படத்தின் வசூலை பொருத்தே அந்த படத்தின் வெற்றியை நிர்ணயம் செய்கிறார்கள். ஒரு படம் வெளியாகி நல்ல வசூல் செய்தால் தான் அந்த படத்தை வெற்றி படமாகவே கருதுகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி வசூலில் சக்கைப்போடு போட்டு கொண்டிருக்கும் படம் தான் புஷ்பா.

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் இளம் நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா படம் விமர்சன ரீதியாகவும் சரி வசூல் ரீதியாகவும் சரி நல்ல வெற்றியை பெற்று வருகிறது. பான் இந்தியா படமான புஷ்பா படம் வெளியான புதிதில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், தற்போது படம் வேற லெவல் வெற்றி பெற்று கொண்டிருக்கிறது.

படம் மட்டுமில்லாமல் படத்தில் இடம்பெற்றுள்ள ஓ சொல்றியா மாமா மற்றும் அய்யா சாமி போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதிலும் நடிகை சமந்தாவின் குத்தாட்டம் தான் படத்தில் ஹைலைட்டே. அதை பார்க்கவே பலர் தியேட்டருக்கு படை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் புஷ்பா படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.

அதன்படி புஷ்பா படம் தற்போது உலக அளவில் சுமார் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாம். கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் சமயத்தில் ஒரு படம் இவ்வளவு பெரிய தொகையை வசூல் செய்திருப்பது சாதாரண விஷயம் அல்ல. அதிலும் புஷ்பா படம் தெலுங்கை விட ஹிந்தியில் தான் அதிக வசூல் செய்து வருகிறதாம்.

அந்த வகையில் தற்போது புஷ்பா படத்தின் ஹிந்தி பதிப்பு மட்டும் சுமார் 57 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் ஹிந்தியில் ஒரு நாள் மட்டும் சுமார் 6.10 கோடி வசூல் செய்து புதிய சாதனையையும் படைத்துள்ளது. மேலும் இனி வரும் சமயத்தில் புஷ்பா படம் ஹிந்தி மார்க்கெட்டில் 75 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை அப்படி வசூல் செய்தால் ஹிந்தி டப்பிங் மார்க்கெட்டில் அதிகப்படியாக வசூல் செய்த படம் என்ற பட்டியலிலும் புஷ்பா படம் இடம்பெறும் என கூறப்படுகிறது. புஷ்பா படத்தின் இந்த வசூல் ரசிகர்களை மட்டுமின்றி திரையுலகினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. கோடி கோடியாக வசூலை அள்ளி நாளும் வரும் 7ஆம் தேதி போட்டி அமேசான் ப்ரைமில் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.

Advertisement Amazon Prime Banner

Trending News