சினிமா பிரபலங்கள் அனைவரும் இந்த வருட புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி அதை தங்கள் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். இதில் பல பிரபலங்கள் புத்தாண்டு தினத்தை வெளிநாட்டில் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன் கோலிவுட்டின் பிரபல ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் துபாயில் தங்கள் புத்தாண்டை கொண்டாடி அந்த போட்டோவை இணைய தளத்தில் வெளியிட்டு இருந்தனர். அந்த போட்டோ சோசியல் மீடியாவில் பயங்கர வைரல் ஆனது.
அந்த வரிசையில் தற்போது யாரும் எதிர்பாராத ஒரு ஜோடி தங்கள் புத்தாண்டை துபாயில் கொண்டாடியுள்ளது. தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடித்தால் அந்த கேரக்டராகவே வாழ்ந்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விக்ரம். அவரின் மகன்தான் துருவ் விக்ரம்.
வாரிசு நடிகர் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் அவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு, மிகவும் ரசிக்கப்பட்டது. இதனால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் அவருக்கு பெண் ரசிகைகள் அதிகம்.
இவர் தற்போது தன் அப்பா விக்ரமுடன் இணைந்து மகான் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் துருவ், ஆதித்யா வர்மா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை பனிதா சந்து உடன் இந்த வருட புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். இன்ஸ்டாவில் காட்டுத் தீயாக பரவும் வீடியோ கடைசிய பாருங்க

அவர்கள் புத்தாண்டை கொண்டாடிய அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆதித்யா வர்மா திரைப்படத்தில் பயங்கர கெமிஸ்ட்ரி உடன் நடித்த இருவருக்கும் தற்போது நிஜவாழ்வில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி விட்டதாக கோலிவுட்டில் பலரும் கிசுகிசுக்கின்றனர்.