சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

திருமணத்தில் விலை உயர்ந்த ஆடைகளை அணிந்த 4 நடிகைகள்.. ஐஸ்வர்யாராயை மிஞ்சிய ஊர்வசி

நடிகைகள் தங்களை அழகாக காட்டிக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவார்கள். அவர்கள் அணிந்திருக்கும் உடையில் இருந்த போடும் மேக்கப் வரை கவனத்துடன் இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் அழகை மேம்படுத்த ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி, யோகா, உணவு பழக்கவழக்கங்கள் போன்றவற்றில் ஆர்வம் காட்டுவார்கள். பொது நிகழ்ச்சி, விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் பிரம்மாண்டமாக உடை அணியும் நடிகைகள் அவர்களுடைய திருமணத்திற்கு அணிந்த புடவையின் விலையை கேட்டால் தலை சுற்றுகிறது.

ஐஸ்வர்யா ராய்: பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக உள்ளவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் கடந்த 2007ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யா அவருடைய திருமணத்தில் நுட்பமான மற்றும் நேர்த்தியான காஞ்சீவரம் புடவையை அணிந்திருந்தார். தங்க நிறத்தில் ஜொலித்த அந்த புடவையின் விலை 51 லட்சமாம்.

ஷில்பா ஷெட்டி: பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி லண்டனை சேர்ந்த ராஜ் குந்த்ராயை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸின் உரிமையாளர்களில் ஒருவராக ராஜ்குந்த்ரா உள்ளார். மிகப் பிரம்மாண்டமாக நடந்த இவர்களது திருமணத்தில் ஷில்பா ஷெட்டி அணிந்திருந்த சிகப்பு புடவையின் விலை 56 இலட்சம் ஆகும். எம்ப்ராய்டரி மற்றும் மணிகள் கொண்ட இந்த திருமணப் புடவையில் 800 படிக ஸ்வரோஸ்கி பதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அனுஷ்கா ஷர்மா: பாலிவுட்டின் முன்னணி நடிகை மற்றும் மாடல் அழகி என்று கலக்கி கொண்டிருக்கும் நடிகை அனுஷ்கா ஷர்மா. இவர் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கு பெற்றார்கள். விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவின் திருமணம் பஞ்சாப் முறையின்படி நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் அனுஷ்கா சர்மா அணிந்திருந்த லெஹெங்காவின் விலை 50 லட்சம். இந்த லெஹங்காவை உருவாக்க 32 நாட்கள் ஆனதாம்.

ஊர்வசி ரவுத்தேலா:பாலிவுட் நடிகை மற்றும் மாடலான ஊர்வசி ரவுத்தேலா மிஸ் திவா யுனிவர்ஸ் கிரீடம் 2015 இல் பெற்றார். நேஹா கக்கரின் திருமணத்தில் ஊர்வசி ரவுடேலாவின் உடை பலராலும் கவரப்பட்டது. அதேபோல் துபாயில் நடந்த நிகழ்ச்சியில் ஊர்வசி ரவுத்தேலா உலகின் விலையுயர்ந்த ஆடையை அணிந்திருந்தார். அதில் 14 கோடி மதிப்பில் உள்ள தங்கத்தாலான ஆடையை அணிந்திருந்தார்.

Trending News