திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சர்வைவரிலிருந்து எனக்கு 10 பைசா தரள.. இது என் சொந்த உழைப்பில் வாங்கியது

விஜயலட்சுமி நடிப்பில் வெளியான சென்னை 600028 திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதன்பிறகு இவர் தேர்ந்தெடுத்த கதைகள் பெரிய அளவில் வரவேற்பு பெறாததால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்தார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கசட தபற ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. அதன் பிறகு சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு போட்டியில் பல்வேறு முயற்சிகள் செய்து தனது திறமையை நிரூபித்தார். கடுமையான போட்டியில் கூட பங்கேற்று விளையாடினார்.

கடைசியாக சர்வைவர் நிகழ்ச்சியில் உமாபதி ராமையா வெற்றிபெறுவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் விஜயலட்சுமி வெற்றி பெற்று 1 கோடி ரூபாய் பரிசுத் தொகையை வென்றார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற விஜயலட்சுமிக்கு தற்போது வரை சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து பரிசுத் தொகை கொடுக்கப்படவில்லை. சமீபத்தில் விஜயலட்சுமி பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். அதனால் பலரும் சர்வைவர் நிகழ்ச்சியில் வென்ற பரிசுத் தொகையை வைத்துதான் பங்களா வாங்கியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.

ஆனால் விஜயலட்சுமி தனது சொந்த உழைப்பில் தான் அந்த பங்களா வாங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தற்போது வரை சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து தனக்கு பரிசுத் தொகை வழங்கவில்லை. மேலும் தன்னுடன் போட்டியிட்ட சக போட்டியாளர்கள் தன்னைப்பற்றி மற்றவர்களிடம் தவறாக பேசி வருவதாகவும் உண்மையிலேயே கடுமையாக விளையாடி தான் வெற்றி பெற்றதாகவும் கூறியுள்ளார்.

காசு வராததால் தற்போது விஜயலட்சுமி புலம்பி வருகிறார்.  இது ஒருபுறம் இருந்தாலும் இவருக்கான பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

Trending News