செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ரஜினியை வைத்து பஞ்சாயத்து பேசும் எஸ்.ஏ.சந்திரசேகர்.. அதுக்கு விஜய் கொடுத்த ரியாக்சன்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதனால் தற்போது விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சமீபகாலமாக விஜய்க்கும் அவரது அப்பாவான எஸ்ஏ சந்திரசேகர் இருக்கும் இடையே ஒரு சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டு இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்தனர். இந்த செய்திதான் சினிமா வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பலரும் இதை பற்றி விமர்சிக்கும் அளவிற்கு இந்த செய்தி பலராலும் பேசப்பட்டது.

ஆனால் எஸ் ஏ சந்திரசேகர் தனக்கும் தன் மகனுக்கும் இடையே இருக்கும் பிரச்சனை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் மற்ற யாரும் இதில் தலையிட வேண்டாம் என கூறியிருந்தார். மேலும் அப்பா மகனுக்குமான பிரச்சனை எல்லோருக்கும் தான் இருக்கிறது. இதனை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை எனக் கூறினார்.

தற்போது எஸ்ஏ சந்திரசேகர் ரஜினியை வைத்து விஜய்யிடம் சமரசம் பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் தற்போது விஜய் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதால் ரஜினியால் பேச முடியவில்லை. ஆனால் விஜய் அதனை பற்றி கண்டுகொள்ளவே இல்லையாம்.

vijay-sac-cinemapettai-01
vijay-sac-cinemapettai-01

ஆனால் கூடிய விரைவில் ரஜினிகாந்த் விஜய்யிடம் எஸ் ஏ சந்திரசேகர் பற்றி பேசுவதாகவும் இந்த பிரச்சினையை சுமூகமாக முடிக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர்.

Trending News