கோலிவுட்டை பொருத்தவரை இசை என்றாலே அது இளையராஜா தான். எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் இளையராஜா பாடல்கள் இல்லாமல் அந்த நிகழ்ச்சி களைகட்டாது. இளையராஜா இசையில் பல பாடல்கள் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் வெற்றி வாகை சூடி உள்ளது.
ஆனால் இளையராஜா இந்த இடத்தை அவ்வளவு எளிதாக அடைந்து விடவில்லை. ஒரு சமயத்தில் அதாவது 1976 கால கட்டங்கள் வரை ஹிந்தி பாடல்கள் தான் தமிழகத்தில் ஆளுமை செய்து வந்ததாம். அந்த சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்த Gurubani மற்றும் R.D.Burman ஆகிய இரண்டு பாலிவுட் இசையமைப்பாளர்களின் இசைக்கும் தமிழ் ரசிகர்கள் அடிமையாகவே இருந்தார்களாம்.
அந்த அளவிற்கு அவர்களின் இசை இருந்துள்ளது. அதன்பின்னர் 1976ஆம் ஆண்டு வெளியான அண்ணக்கிளி என்ற படம் மூலம் இளையராஜா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரின் இசை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டது.
இப்படத்தின் வெற்றி காரணமாக தமிழ் ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக இளையராஜா பக்கம் திரும்பியது. அடுத்தடுத்து கிடைத்த தொடர் வெற்றி காரணமாக இளையராஜா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இசையமைக்க தொடங்கி விட்டார்.
அதுவரை ஹிந்தி பாடல்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் இளையராஜா மிகவும் குறுகிய காலத்திலேயே அந்த ஆதிக்கத்தை மாற்றி அவர் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். அதுமட்டுமல்ல முன்பெல்லாம் படத்தை தயார் செய்த பின்னர் தான் பாடல்களை தயார் செய்வார்கள்.
ஆனால் இளையராஜா வந்த பின்னர் அவரின் இசையில் 5 பாடல்களை தயார் செய்த பின்னரே படத்தை தயார் செய்யும் அளவிற்கு நிலைமை மாறியது. அதனால் தான் அவரை நாம் இசைஞானி இளையராஜா என அழைக்கிறோம்.