வினோத் இயக்கத்தில் நடிகர் அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் ஊரடங்கு மற்றும் கொரோனா தொற்று பரவல் காரணமாக படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளனர்.
இந்நிலையில் படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் வலிமை படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. முன்னதாக வலிமை படத்திற்கு நடிகர் அஜித் சுமார் 70 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது அது உண்மை அல்ல என கூறப்படுகிறது. அதாவது வலிமை படத்திற்காக அஜித்திற்கு 70 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது உண்மைதானாம். ஆனால் அஜித் அந்த முழு தொகையையும் பெறவில்லையாம். அதில் வெறும் 10% தொகையை மட்டுமே சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.
மேலும் அதற்கான காரணமும் வெளியாகியுள்ளது. அதன்படி வலிமை படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் அஜித் ரஷ்யா மற்றும் ராஜஸ்தான் என பல இடங்களுக்கு பைக் ரைடு சென்று வந்தார். இதனால் படமும் தாமதமானது.
எனவே தன்னால் நேர்ந்த தாமதத்திற்கு ஈடு செய்யும் விதமாக அஜித் அவரின் சம்பளத்தை குறைத்து தயாரிப்பாளருக்கு உதவியுள்ளதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இருப்பினும் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் டிரண்டாகி வருகிறது.
போனி கபூரிடம் காசு கொட்டி கிடந்தாலும் கிட்டதட்ட 6 படங்கள் தயாரித்து வருகிறார் இதைத்தவிர ஒரு வெப் சீரிஸ் எடுத்து வருகிறாராம். இதனால் தல அஜித் தனது பெருந்தன்மையை இந்த இடத்தில் வெளிப்படுத்தி இருப்பது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.