திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

வெறும் பனியனில் அலறவிட்ட ரம்யா பாண்டியன்.. ஆனா ரொம்ப ஒல்லியாக ஆயிட்டீங்க!

தமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அந்தப் படத்தைத் தொடர்ந்து ஆண்தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள அவருக்கு சினிமாவில் அவ்வளவாக படங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இதனால் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். அதன் பிறகு ரம்யா பாண்டியன் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இவரை கொண்டாடிய ரசிகர்கள் போகப்போக இவரின் நடவடிக்கைகளால் அவரை கேலியும், கிண்டலும் செய்தனர். அதன்பிறகு அவர் விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகளில் கெஸ்ட்டாக பங்கேற்று வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பட வாய்ப்புக்காக காத்திருந்த அவருக்கு ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருந்த ரம்யா பாண்டியனை பலரும் பாராட்டினர். இதனால் அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தன. அதில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன், ரம்யா பாண்டியன் நடிக்கும் படத்தை பற்றிய அறிவிப்புக்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தற்போது இந்த படத்திற்காக ரம்யா பாண்டியன் உடலை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக ரம்யா பாண்டியன் தன் முழு நேரத்தையும் ஜிம்மில் செலவிட்டு வருகிறார். அப்படி அவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் போது எடுத்த போட்டோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது.

ramyapandian
ramyapandian

இதில் அவர் ஸ்லீவ்லெஸ் பனியன் அணிந்து கொண்டு செல்பி எடுப்பது போல் நிற்கிறார். ரம்யா பாண்டியன் வெளியிடும் ஒவ்வொரு போட்டோவிற்கும் லைக்குகளை அள்ளிக் கொடுக்கும் ரசிகர்கள் இந்த போட்டோவுக்கும் ஏகப்பட்ட லைக்குகளை கொடுத்து வருகின்றனர்.

Trending News